Descriptions
சமூக அபிவிருத்திக்கான தேசிய நிறுவகத்தின் (NISD) உளவியல் மற்றும் உளவளத்துணை பயிலும் மாணவர்கள் அங்கொட, உளநலம் தொடர்பான தேசிய நிறுவகத்திற்கான (NIMH) களவிஜயம் ஒன்றை கடந்த மாதம் 29 ஆம் திகதி மேற்கொண்டனர்.
உளநலம் மற்றும் உள ஆற்றுப்படுத்தல் தொடர்பான நடைமுறைகள், உளநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிகிற்சைகள், வைத்தியசாலையின் செயற்பாடுகள் சார்ந்த அம்சங்கள் குறித்து அனுபவங்களைப் பெற்றும் கொள்ளும் வகையில் இக்களவிஜயம் அமைந்திருந்தது.
உளவளத்துணை டிப்ளோமாப் பாடநெறியின் இணைப்பாளரும் விரிவுரையாளருமான எம். உபைதுல்லாஹ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்ற இக்களவிஜயத்தில் சுமார் 60 மாணவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.