அரபு மத்ரஸா ஆசிரியர்களுக்கான கற்பித்தல் பயிற்சி சான்றிதழ் வழங்கும் வைபவம்
Not allow reviews
Descriptions
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா மற்றும் இலங்கை அரபுக் கல்லூரி சம்மேளனத்தின் கீழ் இயங்கும் அரபுக் கல்லூரிகளில் கடமை புரியும் ஆசிரியர்களுக்கு கற்பித்தல் முறையியல் தொடர்பான 4 மாத குறுங்கால பயிற்சி நெறியின் கட்டம்1 கடந்த பெப்ரவரி முதல் நடைபெற்று வந்தது.
இதில் பங்குபற்றிய 40 ஆசிரியர்களில் கற்கை நெறியையினை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விப் பீடத்தில் எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு இரண்டாம் மூன்றாம் நிலைக் கல்வித் துறையின் தலைவர் கலாநிதி எஸ்.குகமூர்த்தியின் தலைமையில் இடம்பெற உள்ளது.
கல்விப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் பீ.சி.பி பக்கீர் ஜஃபார் மற்றும் கற்கை நெறியின் விரிவுரையாளர்கள் பலரும் கலந்து கொள்வர். இந்நிகழ்வின் விசேட அதிதியாக அஸ்ஷெய்க், முப்தி, எம்.ஐ.எம்.ரிஸ்வி (தலைவர், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா) கலந்து கொள்வார் என கற்கை நெறியின் இணைப்பாளர் கலாநிதி ப.மு.நவாஸ்தீன் தெரிவித்தார்.