தர்மாசோக்க வித்தியாலய புதிய அழகியற் பிரிவு கட்டடம் மாணவர்களிடம் கையளிப்பு
Not allow reviews
Descriptions
அம்பலங்கொட தர்மாசோக்க வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அழகியற்கலைப் பிரிவுக் கட்டிடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
நினைவுப் பலகையை நேற்று பிற்பகல் திறந்து வைத்து கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி அதனைப் பார்வையிட்டார்.
பாடசாலையின் அதிபர் ஹசித்த கேசர வெத்தமுனியினால் ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தென் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார, முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய ஆகியோரும் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர்.
(News.lk)