Descriptions
உலக உளவியல் சகாதாரத் தினத்தை அனுஸ்டிக்குமாக பாடசாலை மட்டங்களில் இருவாரங்களுக்கு விசேட ஆலோசனை வேலைத்தி;டங்களை நடாத்துவதற்கு கல்வி அமைச்சு பாடசாலை அதிபர்களை வேண்டியுள்ளது.
சகல நாடுகளிலும் உலக உளவியல் சுகாதாரம் ஒக்டோபர் 10 ஆம் திகதியும், தேசிய உளவள ஆலோசனை தினம் ஒக்டோபர் 15 ஆம் திகதியும் அனுஸ்டிக்கப்படுகிறது.
இவ்வருட உளவியல் சுகாதார தினத்தின் தொனிபபொருள் தேகாரோக்கியமிக்க உள்ளம், ஆரோக்கியம் கொண்ட வேலைத்தளம் என்பதாகும்.
இதனை முன்னிட்டு ஒக்டோபர் 9 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை பாடசாலைகளில் குறித்த கருப்பொருளின் கீழ் நிகழ்வுகள் இடம் பெறவுள்ளன. இவ்வாலோசனை வேலைத்திட்டங்கள் மாகாண, வலய மற்றும் பாடசாலை மட்டங்களில் இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.