பாடசாலை மாணவர்களுக்கு போசனை உணவு வினியோகிப்பது எனது கனவாகும் –கல்வி அமைச்சர்
Not allow reviews
Descriptions
பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை நேரத்தில் போசனை மிக்க ஒரு வேளை உணவு வழங்குவது தமது கனவாகும் என கல்வி அமைச்சர் அகில விராஜ்காரிய வசம் தெரிவித்தார்.
இக்கனவை நனவாக்குவதற்காக ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தி கல்வி அமைச்சு சேமிக்கும் நிதியை இதற்காக ஒதுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தேசிய கல்வி நிறுவகத்தில் கடந்த 26 ஆம் திகதி இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது அமைச்சினுள் இடம்பெற்றுக் கொண்டிருந்த அனைத்து ஊழல் மோசடி தேவையற்ற செலவுகளை நிறுத்தியுள்ளதனால் தமக்குத் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதற்கான சூழல் உருவாகிவிட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களுக்கு போசனை உணவு வழங்கும் திட்டப் பிரேரணையை விரைவில் ஜனாதிபதி. மற்றும் பிரதமரிடம் கையளிக்க உள்ளதகாவும் அவர் தெரிவித்தார்.
பாடசாலைகளில் மனைப்பொருளியல் கல்வியை விருத்தி செய்யும் நோக்கில் மனைப் பொருளில் உபகரணத் தொகுதியை வினியோகிக்கும் நோக்கில் இவ்வைபவம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த்து.
13 வருட தொடர் கல்வி எண்ணக்கருவிற்கு பங்களிக்கும் வித்த்தில்தேசிய கல்வி நிறுவகத்தில்ஹோட்டல் பயிற்சி வழங்கல் மற்றும் மனைப் பொருளியல் தொடர்பான பயிற்சி வழங்கல் முதலானவற்றை மேற்கொள்ளுவதற்கு ஒழுங்கு செய்யும் வித்த்தில் தேசிய கல்வி நிறுவகத்தில் நவீனமயப்படுத்தப்பட்ட மனைப்பொருளியல் அறையும் திறந்து வைக்கப்பட்டது.
அவ்வாறே, அண்மைய பாடசாலை சிறந்த பாடசாலை கருத் திட்டத்தின் கீழ் அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் வித்த்தில் 100 பாடசாலைகளுக்கு மனைப்பொருளியல் அறையைமேம் படுத்துவதற்காக தலா 5 லட்சம் வீதம் நிதிவுதவியும் வழங்கப்பட்டது.
அத்தோடு சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 150 பாடசாலைகளுக்கு தேவையான மனைப்பொருளியல் உபகரணங்களும் வினியோகிக்கப்பட்டன.
(கல்வி அமைச்சு)