Descriptions
கல்வி அமைச்சு மூன்று வருட காலமாக ஆசிரியர் பதவி உயர்வுகளுக்கான செயன்முளைகளை நடைமுறைப் படுத்தாத காரணத்தினால், ஆசிரியர்கள் ஒரு லட்சம் பேரின் பதவி உயர்வுகள் தடைப்பட்டுள்ளதாக இலஙகை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்தார்.
1994 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலஙகை ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பு 2014.10.23 ஆம் திகதி வௌ யிடப்பட்ட வர்த்தமாணியில் திருத்தப்பட்டு புதிய ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பாக வெளியிடப்பட்டது.
இவ்வறிவித்தல் வியிடப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ள போதிலும் தற்போது வரையும் பதவி உயர்வுகள் தயாரிக்கப்பட்டு சம்பள நிலுவைகள் கணக்கிடப்பட்ட வில்லை என ஜோஸப் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்
ஆசிரியர் பிரமாணக் குறிப்பின் படி பதவி உயர்விற்கு தடை தாண்டல் பரீட்சைக்காக 20 மொடியுல்கள் பூரணப்படுத்தவேண்டியுள்ளது.
மூன்று வருடங்கள் கடந்துள்ள போதிலும் இந்த மொடியுல்களைத் தயாரித்து அச்சிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வில்லை என்றும் இதனால் கடந்த 23 ஆம் திகதி முதல் அனைத்து பதவி உயர்வுகளும் தடைப்பட்டுவிட்டதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆசிரியர் பிரமாணக் குறிப்பு இடைக்கால ஒழுங்குபடுத்தல் காலப்பகுதியை நீடிக்குமாறும், கடந்த மூன்று வருடங்களில் ஏன் இப்பணிகள் நடைபெற வில்லை என்பதை ஆராய்ந்து பார்க்குமாறும் கல்வி அமைச்சரிடம் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.