Descriptions
மரண தண்டனை விதிக்கப்பட்டு வெலிகட சிறைச்சாலையிலுள்ள இந்திக்க பமுணுசிங்ஹ என்பவர் கலை முதுமாணிப் பரீட்சைக்குத் தோற்றுவதன் மூலம் சிறைச்சாலை வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ளதாக வெலிகட சிறைச்சாலை அதிகாரி சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.
களனி பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடத்தின் அறிவித்தலுக்கு ஏற்ப தற்போது காணப்படும் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப இம்மாதம் 29 ஆம் திகதி முதல் டிசம்பர் 9 வரைவெலிகட சிறைச்சாலையில் ஒரு பரீட்சை நிலையம் இயங்கும்.கைதி ஒருவர், சிறைச்சாலைக்குள்ளேயே கல்வி கற்று முதுமாணிப் பரீட்சை ஒன்றுக்கு தோற்றும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இக்கைதி கல்கிஸ்ஸைப் பிரதேசத்தில் இடம்பெற்ற சியாம் என்பவரின் கொலை தொடர்பான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட பொலிஸ் உதவிப் பரிசோதகர் என்றும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
(mawbima)