Descriptions
கிழக்கு மாகாண ஆசிரியர் நியமன நேர்முகத் தேர்வு நவம்பர் மாதம் 9,10,11 ஆகிய திகதிகளில ்நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவூம் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கோரப்பட்டிருந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் நடைபெற்ற போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் 24 ஆம் திகதி வெளியிடப்பட்டன.
1440 வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் பெறுபேறுகளின் அடிப்படையில் 2868 பேர் சித்தியடைந்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் 1296 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 576 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 996 பேரும் சித்தியடைந்துள்ளனர்.
தமிழ் மொழிமூலம் 1171 பேரும் சிங்கள மொழி மூலம் 317 பேரும் ஆங்கில மொழி மூலம் 45 பேரும் இவ்வாறு சித்தியடைந்துள்ளனர்.
இப்பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் நேர்முகப்பரீட்சைக்கும் பிரயோகப்பரீட்சைக்கும் தகுதி பெறுகின்றனர்.
நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 9இ10இ11 ஆகிய தினங்களில் திருகோணமலையில் உள்ள பொதுச் சேவை ஆணைக்குழுக் காரியாலயத்தில் காலை 8.30 முதல் நடைபெற உள்ளதாக பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கே.ஜி. முத்துபட்டா அறிவித்துள்ளார்.
க.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தர சித்திச் சான்றிதழ்இ பட்டச் சான்றிதழ் மற்றும் ஆறு மாதங்களுக்குள் பெற்ற வதிவிடச் சான்றிதழ்இ விவாகச் சான்றிதழ்இ நற்சான்றிதழ் முதலானவற்றை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.