Descriptions
தொழிநுட்பக் கல்லூரிகளின் 2018 ஆம் ஆண்டுக்கான பல்வேறு துறைசார் கற்கைநெறிகளுக்கு மாணவர் பதிவூக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2018.10.27 ஆம் திகதி வெளியிடப்பட்ட அரச வர்த்தமாணியில் விபரங்களும் மாதிரி விண்ணப்பப் படிவங்களும் உள்ளன.
முழு நேரக் கற்கைகளைத் தொடரும் மாணவர்களுக்கு தமது குடும்ப வருடமான நிலைமைகளுக்கேற்ப கல்லூரி வகுப்புகளுக்கு சமூகமளிக்கும் நாளொன்றுக்கு ரூபா 50 விதம் மாதமொன்றுக்கு 1000 க்கு அதிகரிக்காத உதவிக் கொடுப்பனவூ வழங்கப்படும்
அதேவேளை குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த முழு நேரக் கற்கை நெறி மாணவர்களுக்கு ஏறத்தாழ வருடமொன்றுக்கு ரூபா 2500 வீதம் மாணவர் உதவித் தொகையூம் பெற்றுக் கொள்ள முடியூம்.
சகல முழு நேரக் கற்கை மாணவர்களும் பருவ காலச் சீட்டுக்கள் பெற்றுக் கொள்ள தகுதி பெறுவர்.
மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர்இ 0711997111 என்ற தொலைபேசி இலக்கத்தோடு தொடர்பு கொள்ளலாம்.