Descriptions
மேத்தன்வெளி கிராமசேவகர் பிரிவிற்குரிய வாரிவெளி - மேத்தன்வெளி குளக்கட்டு வீதி கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக செப்பனிடப்படாத நிலையில், தற்போது வேப்பன்குளம் நீர்ப்பாசன திணைக்களம் வாரிவெளி குளக்கட்டு புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலைத்திட்டம் இன்னும் நிறைவேறாது காணப்படுவதகாவும் இதனால் மக்கள் இவ்வீதியால் பயணிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அறியமுடிகிறது.
வாரிவெளி விவசாய அமைப்பினூடாக நீர்ப்பாசன நிர்வாகிகள் செய்துவரும் இவ்வேலைத்திட்டம் உள்ளூர் ஒப்பந்தக்காரர்ளுக்கு வழங்கப்படாமை ஏற்கனவே மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இது மழை காலமாகையால் இந்த வீதி புனரைமைப்பு தாமதம் காரணமாக இங்கு வாழும் சுமார் ஏழு ஊர் மக்கள் இவ்வீதியால் பயணிக்க முடியாது பெரும் துன்பங்களை எதிர்கொண்டுள்ளதோடு எப்போது இப்பணிகள் நிறைவுபெரும் என மேத்தன்வெளி மக்கள் அங்கலாய்க்கின்றனர்.