Descriptions
” நான் நேர்மையாகவே செயற்படுகின்றேன். நீதியை நிலைநாட்டுவதற்காக சிறைக்குசென்று ‘ஜம்பர்’ அணியவும் தயாராகவே இருக்கின்றேன்.” – என்று சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய மரிக்கார் எம்.பி.,
” போலியான ஆவணங்களை சபாநாயகர் தயாரித்துள்ளார். இதற்காக சிறைக்குசெல்லவேண்டிவரும். எனவே, ‘ஜம்பர்’ அணிவதற்கு தயாராகுங்கள்” என்று உதய கம்மன்பில எம்.பி. விடுத்துள்ள அறிவிப்பு குறித்து சபாநாயகரின் கவனத்தை ஈர்த்தார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர்,
” நான் எந்தவொரு போலி ஆவணத்தையும் தயாரிக்கவில்லை. விசாரணைகளுக்கு முகங்கொடுக்க தயாராகவே இருக்கின்றேன். நீதியை நிலைநாட்டியதற்காக – ஜனநாயகத்தை பாதுகாத்ததற்காக ‘ஜம்பர்’ அணியவேண்டிவரின் அதையும் செய்வதற்கு தயார்.
நான் நடுநிலைதவறி செயற்படுகின்றேன் என்றால், எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவாருங்கள்” என்றார்