கோட்டபிட்டிய கனிஷ்ட வித்தியாலயத்தின் புதிய கட்டிடம் மாணவர்களிடம் கையளிப்பு
Not allow reviews
Descriptions
கோட்டபிட்டிய கனிஷ்ட வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 6 வகுப்பறைகளைக் கொண்ட புதிய மூன்று மாடிக் கட்டிடத்தை ஜனாதிபதி மைத்திரி பாலசிரிசேன நேற்று (04) மாணவர்களிடம் கையளித்தார்.
இக்கட்டிடத்திற்காக 84 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
நினைவுப்படிகத்தை திரைநீக்கம் செய்து கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி மாணவர்களுடன் சுமுகமாக கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து புதிய வகுப்பறையில் இடம்பெற்ற நுண்கலை பாடத்தையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.
ஜனாதிபதியின் வருகையை குறிப்பிடும் வகையில் கல்லூரி வளாகத்தில் மரக் கன்று ஒன்று நடப்பட்டது, கல்லூரியின் ஆரம்ப மாணவரான டப்ளியு.எம்.காமினி விஜேகோனுக்கும் கடந்த 05 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட ஏ.டப்ளியு.சீ.ஓதாத அம்பவத்த என்ற மாணவருக்கும் விருதுகளை ஜனாதிபதி வழங்கினார்.
மேலும் புதிய பாடசாலை கட்டிடத்தை நிர்மாணித்த விமானப் படை அணியுடனும் பாடசாலை அதிபர் டீ.எல்.ஜே. குணசேகர உள்ளிட்ட ஆசிரியர் குழாமுடனும் ஜனாதிபதி புகைப்படத்திற்கு தோற்றினார்.
(news.lk)