Descriptions
கடந்த வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட ஐந்து ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான கணனி மற்றும் ஐந்து ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான லெப்டொப்களை பாடசாலைகளுக்கு வழங்குவதற்கான திட்டத்தின் படி வழங்கியுள்ள கணினிகளும் லெப்டொப்களும் எங்கே என தொழிற்சங்கங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
புதிய வரவு செலவுத் திட்டதை தயாரிக்க ஆரம்பித்துள்ள போதிலும் கடந்த வருடம் முன் மொழியப்பட்ட இத்திட்டத்தை கல்வி அமைச்சு இன்னமும் ஆரம்பிக்க வில்லை என்றும் கல்வி அபிவிருத்திக்கு இவ்வாறான திட்டங்களை
நடைமுறைப்படுத்தவுள்ளதாக பிரதமர் உட்பட அமைச்சர்கள் ஊடகங்களில் தம்பட்டம் அடித்துக் கொண்டு மாத்திரம் திரிகின்றனர் என்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்தார்.