Descriptions
தேசிய பாடசாலைகளில் தொடர்ச்சியாக 10 வருடங்களுக்கு மேலாக ஒரே பாடசாலையில் கடமையாற்றும் மீதமுள்ள 9000 பேருக்கு இடமாற்றங்களை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துவருகிறது.
கடந்த வாரங்களில் சுமார் 2500 ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் வழங்கப்பட்டதோடு இடமாற்;றங்களை எந்த காரணத்திற்காகவும் ரத்துச் செய்து கொள்ளாமலிருக்க அதிக கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதன் இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 9000 ஆசிரியர்களுக்கும் இடமாற்றங்களை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
தொடர்ந்தும் 10 வருடங்களுக்கு மேலாக ஒரே பாடசாலையில் சேவையாற்றும் ஆசியர்கள் தொடர்பான விபரங்களை கல்வி அமைச்சு கோரியிருந்த போதிலும் பல அதிபர்கள் தகவல்களை மறைத்துவழங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு போலியான தகவல்களை வழங்கிய அதிபர்களுக்கு எதிராக நடடிவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.