நூலக தகவல் விஞ்ஞான டிப்ளோமா கற்கைநெறி – மட்டம் 1 க்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
Not allow reviews
Descriptions
நூலக தகவல் விஞ்ஞான டிப்போமா கற்கைநெறி மட்டம் 1 (DIPLIS Level1-2018) கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த தொழில் சார் டிப்ளோமா பாடநெறி நூலக தகவல் துறைசார் பல்வேறுபட்ட தொழில்களுக்கு புகுமுகத் தகைமையாக்க் கொள்ளப்படுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் பெற்றிருத்தல் அல்லது க.பொ.த உயர் தரப் பரீட்சையில் ஒரே அமர்வில் மூன்று பாடங்களில் சித்திகளுடன் க.பொ.த உயர் தரப் பரீட்சையில் இரண்டிக்கு மேற்படாத அமர்வுகளில் தாய் மொழியில் திறமைச் சித்தியுடன் ஆறு பாடங்களில் சித்தி பெற்றிருப்பதுடன் தூய கணிதம் அல்லது கணித்த்திலும் ஆங்கிலத்திலும் சித்தபெற்றிருப்பது இப்பாடநெறிக்கான அனுமதித் தகுதியாகும்.
கொழும்பு, மட்டக்களப்பு, யாழ்ப்பானம் ஆகிய மத்திய நிலையங்களில் தமிழ்மொழி மூலம் வகுப்பறைக் கற்பித்தல் நடைபெறும்.
அலுவலகம் 19.11.2017 ஆம் திகதி மு.ப 9.30 முதல் பி.ப 1.00 வரை திறந்திருக்கும் போது 0112589103 என்ற இலக்கத்திற்கு அழைத்து பதிவுகளை செய்து கொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை
அலுவலகத்தில் இருந்து விண்ணப்ப பத்திரத்யும் விபரங்களையும் பெற்றுக்கொள்ள முடியும். அல்லது இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய முடியும்.
பூரணப்படுத்திய விண்ணப்ப்ப் படிவங்களை 2017 டிசம்பர் 16 ஆம் தகதி அன்றோ அதற்கு முன்னரோ கிடைக்க்க் கூடியதாக அனுப்பி வைக்க வேண்டும். தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகள் நேர்முகப் பரீட்சை ஒன்றிற்கு சமூகமளிக்கவேண்டும்
விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ள க்லிக் பண்ணுங்கள்
Education Officer, Sri Lanka Library Association
The Professional Centre,
275/75, Prof. Stanley Wijesundra Mawatha
Colombo 07
Tel/Fax 0112589103
Email – slla@sltnet.lk