Descriptions
நதிகளின் பள்ளத்தாக்குகளுக்கு அண்மையில் ஆரம்பமான ஆதி மனித நாகரீகம், படிப்படியாக வளர;ச்சியடைந்து, பல்வேறு தேவைகளின் நிமித்தம் பல்வேறு பிரதேசங்களுக்கும், நாடுகளுக்கும் இடம்பெயர;ந்தது. அவ்வாறு இடம்பெயர;ந்த மனிதன் தங்கள் உறவுகளுடனும், நண்பர;களுடனும் தொடர;புகளைப் பேண வேண்டிய அவசியம் ஏற்பட்டதால், அதற்கான வழிகளைத் தேடினான். அவ்வாறு தேடிப் பெற்றுக் கொண்டதே அஞ்சல் முறையாகும்.
ஆரம்பத்தில் புறாக்களைப் பழக்கி, தகவல்கள் அடங்கிய துண்டை அதன் கால்களில் கட்டி செய்திகளைப் பரிமாறினான். பின்னர; மனிதனுக்கு பயிற்சியளித்து அவன் மூலம் செய்திகளைப் பரிமாறினான். அவ்வாறு பழக்கப்பட்டு படிப்படியாக வளர;ச்சியடைந்து, இன்று சேவைத்துறையில் நல்ல நிலையில் காணப்படுவதே அஞ்சல் துறையாகும்.
உலகின் எல்லா நாடுகளிலும் வியாபித்திருக்கும் இவ்வஞ்சல்துறை, இலங்கையில் ஒல்லாந்தரின் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் 1798ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாயினும், பிரித்தானியரின் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் 1815ஆம் ஆண்டின் பின்னர;தான் நல்ல முறையில் வளர;ச்சியடைந்தது எனக் கூறலாம்.