முசலி மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக விசேட அபிவிருத்தி குழுக் கூட்டம் !
Not allow reviews
Descriptions
முசலிப் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் காணி நிலம், வீட்டுத்திட்டத்திற்கு மணல் பெற்றுக்கொள்ளல் மற்றும் பல பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் றிசாட் பதியுத்தீன் அவர்கள் தலைமையில் விசேட அபிவிருத்தி குழுக்கூட்டம் இன்று 06.03.2019 காலை 10 மணியளவில் இடம்பெற்றது.
இதில் பொதுமக்களின் பல்வேறு பிரச்சினைகள் இனங்காணப்பட்டு தீர்வுகள் குறித்து ஆக்கபூர்வமான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
குறிப்பாக, சிலாவத்துறை காணி மீட்பு தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட செயலாளர், முசலி பிரதேச செயலாளர், முசலி பிரதேச சபை தவிசாளர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
எனினும் வளமைபோல் இக்கூட்டமும் சலசலப்புடன் சப்தமாகவே இடம்பெற்று முடிந்ததாக சமூக ஆவதானிகள் கருத்துரைக்கின்றனர்.