முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரனி ஹுனைஸ்பாரூக் அவர்களுக்கும் ஆளுநர் சுரேன் ராகவனுக்கும் இடையில் சந்திப்பு
Not allow reviews
Descriptions
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ்பாரூக் அவர்களுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோர்கிடையிலான சந்திப்பு (0602.2019) அன்று ஆளுநர் செயலகத்தில் இடம் பெற்றது.
இந்த சந்திப்பில் வன்னி மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது . குறிப்பாக வன்னி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் பிரச்சனைகளான ஆங்கிலம்,விஞ்ஞானம்,கணிதம் படங்களுக்கான ஆசிரியர் பற்றக்குறை,மீள்குடியோற்றப்படதாத தமிழ் முஸ்லிம் மக்களின் மீள்குடியோற்றம்,தற்காலிகமாக பாடசாலைகளில் கடமையற்றும் அதிபர்களின் நிரந்தர நியமனம் ,மற்றும் தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமனம்,பாடசாலைகளை தரம் உயர்த்தல் காணிப்பிரச்சினை ,வைத்தியசாலை பிரச்சனை, உள்ள பிரச்சனை தொடர்பாக பேசப்பட்டது.
இது தொடர்பாக ஆளுநர் இப்பிரச்னைக்கான தீர்வு திட்டம் ஒன்றை மிகவிரைவில் செயற்பாடுத்துவதாகவும் அதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதாகும் குறிப்பிட்டார்.
மேலும் வன்னி மாவட்டத்திலுள்ள ஆங்கிலம்,விஞ்ஞானம்,கணிதப்படங்களுக்கான ஆசிரியர்களை உடனாடியாக அந்தந்த பாடசாலைகளுக்கு நியமிக்குமாறு ஆளுனரின் செயலாளருக்கு உத்தரவிட்டார்.
சட்டத்தரனி ஹுனைஸ்பாரூக் குறிப்பிடும் பொழுது இவ்வாறான தமிழ் பேசும் ஒருவர் ஆளுநராக வந்துள்ளதை தாம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாகவும்,எதிர்வரும்காலங்களில் ஆளுனரின் நல்லெண்ண செயற்பாடுகளுக்கு ஸ்ரீலாங்க முஸ்லிம் காங்கிரசும் நானும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் குறிப்பிட்டதுடன் வன்னி மாவட்டத்துக்கு உங்களுடைய வருகையை விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
முடியுமான பிரச்சனைகளை தீர்த்து மீண்டும் கலந்துரையாடுவதாக ஆளுநர் உறுதியளித்தார்.
இக்காலந்துரையாடலில் ஆளுனரின் செயலாளர் அவர்களுக்கு கலந்து கொண்டார்.