Descriptions
அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் திரு. சிறாஜ் மஷ்ஹூர் அவர்கள் மாநகர சபை உறுப்பினராக இருந்தமைக்காக தனக்குக் கிடைத்த இரண்டரை மாத கொடுப்பனவை, அக்கரைப்பற்று ஜம்இய்யதுல் உலமாவின் நிரந்தரக் கட்டிட நன்கொடை நிதிக்காக அன்பளிப்புச் செய்துள்ளார்.
இதனை ஜம்மியத்துல் உலமாவின் அக்கரைப்பற்றுக் கிளைத் தலைவரும் அவரது இஸ்லாம் பாட ஆசிரியருமான மௌலவி எம்.எம்.அப்துல் லத்தீப் (பஹ்ஜி) அவர்களிடம் கையளித்தார்.
இந்தக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான காணியை, புளட்ஸ் கழகத்தினர் ஜம்இய்யதுல் உலமா கிளைக்கு அன்பளிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத் தக்கது.
இத்தகைய முன்மாதிரி பாராட்டத்தக்கதாகும்.