முசலி தேசிய பாடசாலை இல்ல விளையாட்டு விழாவும் கட்டிட திறப்பு விழாவும்.
Not allow reviews
Descriptions
மன்/முசலி தேசிய பாடசாலையில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள மூன்று மாடி வகுப்பறைப் கட்டிடம்,
இரண்டு மாடி ஆசிரியர் விடுதி கட்டிடம் என்பவற்றை இன்று (09) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில், வர்த்தகம் மற்றும் நீண்டகால இடம் பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்ற கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருமாகிய அல் ஹாஜ் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
பாடசாலை அதிபர் உவைஸ் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ரிப்கான் பதியுதீன்,அலிகான் சரிப் முசலி பிரதேசபை தவிசாளர் சுபியான் பிரதி தவிசாளர் முகுசீன் ரயிசுதீன், மன்னார் பிரதேசபை தவிசாளர் முஜாஹிர் மற்றும் பிரதேசபை உறுப்பினர்கள் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.