Descriptions
நண்பர் இஸ்ஸதீன் றிழ்வான் தலைமையிலான ChangesDo Foundation குழுவினரின் முயற்சியில் நேற்று மறிச்சுக்கட்டியில் முன்பள்ளியொன்று திறந்து வைக்கப்பட்டது.
முன்பள்ளிக் கட்டடத்தின் முன்னால் மரக்கன்றொன்று நாட்டப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 20 முன்பள்ளி மாணவச் செல்வங்கள் பள்ளிக்குள் நுழைந்தனர்.
நண்பர் இஸ்ஸதீன் றிழ்வானின் தொடரான சமூகநலப் பணிகளில் ஒன்றாக இம்முன்பள்ளி திறப்பு இன்று இடம்பெற்றது.
சின்னஞ் சிறார்களின் இந்நிகழ்வில் கலந்து கொள்ளக்கிடைத்தமை மனமகிழ்வைத் தருகின்றது.
- முகுசீன் றயீசுத்தீன் -