முசலிப்பிரதேச உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான கலந்துரையாடல்
Not allow reviews
Descriptions
நேற்று (16.01. 2109) முசலி மக்கள் மன்றத்தினால் கூழான்குளம் பாடசாலை பள்ளிவாசல் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மாதாந்த விஷேட கூட்டத்தின்போது இம்முறை முசலி மாணவர்கள் உயர் தர பரீட்சையில் பெற்றுக்கொண்ட பரீட்சை பெறுபேறுகளின் வீழ்ச்சி நிலை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
முசலி மக்கள் மன்றின் செயலாளர் திரு. ஏ.கே.எம். சியாத் நளீமி தலைமையில் இடம்பெற்ற இவ்வமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மூத்த ஆசிரியரும் முசலிப்பிரதேச சபை உப தவிசாளரும் ஆகிய எம். றைசுத்தீன் அவர்கள் முசலி மாணவர்களது உயர்தர பரீட்சை பெறுபேறு கவலை தருவதாக உள்ளதாகவும் மாற்றுத்தீர்வுகளை நோக்கி முசலி கல்விச் சமூகம் நகர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் அவர் கூறியதாவது:
முசலி தேசிய பாடசாலையில் கலைத்துறையில் 34 மாணவர்கள் தோற்றி 25 மாணவர்கள் மாத்திரமே அனைத்து பாடங்களிலும் சித்தியடைந்துள்ளனர். எனினும் ஓரிருவரே பல்கலைகழகம் தெரிவாகும் வாய்ப்பு உள்ளது. விஞ்ஞான துறையில் 6 பேரும், கணித்த்தில் 5வரும் பரீட்சைக்கு தோற்றி 1 மற்றும் 3வர் சித்தியடைந்துள்ளனர். வணிகத்தில் 2பேரும், ஈ.ரெக் பாடத்தில் 3வரும் சித்தியடைந்துள்ளனர். இது முசலி தேசிய பாடசாலையின் கல்வி வீழ்ச்சியை நோக்கி செல்வதற்கு ஆரம்பித்துள்ளதாக குறித்துக்காட்டினார்.
மேலும் கொண்டச்சி, சிலாவத்துறை, பண்டாரவெளி, வேப்பன்குளம் ஆகிய பாடசாலைகளில் மாணவர்கள் பல்கலைகழகம் தெரிவாகும் வாய்பு குறைவாகவே உள்ளது என்றும், நிர்வாக பலவீனம், மாணவர்களது தகுதிக்கு மேற்பட்ட துறைகளை தெரிவுசெய்வது, வளங்கள் பற்றாக்குறை, உயர்தரத்தை பாடசாலையில் இணைக்க எடுக்கப்படும் போட்டி, அரசியல் தலையீடுகளே மாணவர்களது கல்வி வீழ்ச்சிக்கு பிரதான காரணமாக உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் சட்டத்தரணி எம் ஹஸ்மி, வைத்தியர் றிபாஸ், வைத்திய பீட மாணவர் கியாஸ், கணித பீட மாணவர் றசான் மற்றும் இன்பாஸ், ஜெஸீர், வசீம், அம்ஜத் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைத்தனர்.
அத்துடன் இங்கு இடம்பெற்ற கலந்துரையாடலில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குறுகிய கால திட்டமாக;
01. இம்முறை (2019) உயர் தரத்தில் கலை தொழிநுட்ப துறைகளில் பரீட்சை எழுத இருக்கும் மாணவர்களது கற்றல் நிலை அடைவுகள் தொடர்பாக பாடசாலை மட்ட மதிப்பீடு ஒன்றை தயார் படுத்தி மாணவர்களது மேலதிக கல்வித் தேவை குறித்த வேண்டுதலை உறுதிப்படுத்தல்.
02. முசலி கல்விமான்கள், பு த்திஜீவிகள், துறை சார்ந்தோர், தொழிலதிபர்கள் அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்களை உள்ளடக்கிய பொதுக்கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வது.
03. திட்ட நடைமுறை ஒழுங்குளை நடைமுறைப்படுத்த உதவிகளை ஒன்றுதிரட்டல் திரட்டல்
நீண்ட கால திட்டமாக;
1. உயர்கல்வி வழிகாட்டல் கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள், என்பவற்றை ஒழுங்குசைய்தல்.
2. மாணவர்களது தகுதிக்கேற்ப துறைசார்ந்த பாடவிதன தெரிவுகளை மேற்கொள்வதை ஊக்குவித்தல்.
3.உயர்கல்வியின் முக்கியத்துவம் தொடர்பான பிரக்ஞையை மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் ஏற்படுத்தல்.
போன்ற விடையங்கள் கலந்துரையாடப்பட்டன.