Descriptions
மலேசியாவின் மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மத் பதவி விலகினார்லேசியாவின் மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மத், யங் டி- பெர்துவன் அகாங் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவி விலகினார். ஆனால் பதவி விலகியதற்கான எந்தவொரு காரணத்தையும் அவர் குறிப்பிடவில்லை. ரஷ்யாவின் முன்னாள் மாடல் ஒருவரை அவர் திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் பதவி இறங்கும் அறிவிப்பு வந்திருக்கிறது. ஆனால் அரண்மனையில் இருந்தோ அல்லது மலேசிய அரசுத் தரப்பிலிருந்தோ இந்த திருமணம் குறித்து அறிவிக்கப்படவில்லை. மன்னர் பதவி இறங்கியது மலேசியாவில் பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியிருக்கிறது. மேலும், உள்ளூர் அரசியலில் ஒரு நுட்பமான மாற்றத்தையும் உண்டாக்கியிருக்கிறது.