நடந்து முடிந்த உயர் தர பரீட்சை முடிவுகளும் முசலி பிரதேச அரசியல் தலைமைகளும்.
Not allow reviews
Descriptions
2018 டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட உயர் தர பரீட்சை பெறுபேறுகள் முசலி பிரதேச எல்லைக்குள் கடந்த காலங்களில் இடம்பெற்ற மாதிரி இம்முறை காணப்படவில்லை.பாடசாலைகள் அனைத்தும் பசோகையில் காணப்பட்டது.வட்ஸ்அப் குழுக்கள் மரண மந்தத்தில் இருந்தது.இந்நிகழ்வானது தொடருமானால் முசலி மீண்டும் ஒரு இடப்பெயர்வை சந்திக்கலாம்.காரணம் சரியான தலைமைத்துவத்தை பெறாவிட்டால்,கல்வியிலே வீழ்ச்சி கண்டால் முன்பு தாங்கள் புத்தளம் போன்ற பிற மாவட்டங்களில் பெற்ற கல்வி வாய்ப்புக்களை தமது சந்ததிகளுக்கு பெற்றுக்கொடுக்க மீள் இடப்பெயர்வு ஏற்பட வாய்ப்பு அதிகமுள்ளது.
எனவே இவ்வாறான சந்தர்ப்பங்கள் நிகழாமல் இருக்க அரசியல் தலைமைகளும் பணியாற்ற ஆக்கபூர்வமான முறையில் செயற்பட கடமைப்பட்டுள்ளனர்.இவர்கள் இந்த விடயத்தை தட்டிக் கழிக்க முடியாது.
காரணம்.முசலியின் தவிசாளர் ஓர் ஆசிரியராக இருந்தவர்.உதவித்தவிசாளர் மிகப்பெரிய கல்விமான்.முசலியின் எதிர்கட்சி தலைவர் ஒரு பட்டதாரி.முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒரு கலாநிதி இன்னோரு மாகாண சபை உறுப்பினர் மூத்த கல்விமான்.
அத்துடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இருவரும் கனத்த சட்டத்தரணிகள்.
இது இல்லாமல் அண்மையில் அரசியல் பிரதேசத்திற்கான உத்வேக செயற்பாடுகளுடன் வலம் வருபவர் ஒரு வளர்ச்சியடைந்த பாடசாலையின் பணிப்பாளர்.
இவ்வாறு கல்விப் பின் புலத்தை கொண்ட இக்குழுவினர் அவர்களின் பிரதேச முன்னேற்றம் கருதி ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் ஏதாவது செய்தார்களா?என்று உரியவர்களும் ,முசலி மக்களும் சிந்திக்க வேண்டும்.
சுமார் 30ஆயிரம் சனத்தொகை கொண்ட முசலியில் சிறந்த கல்வி நிறுவனங்கள் எதுவும் இல்லை.திட்டமட்ட பிரதேச கல்வி மேம்பாடு எதுவும் இல்லை.இதற்காக உழைப்பவர்களையும் இனம் காண முடியாதுள்ளது.இடைவிலகல் மாணவர்கள்,இளைஞர்கள் தொழிலற்று அலைகின்றனர்.இதனால் போதை கெட்ட நடத்தைகள் அதிகரிக்கின்றது.
தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படவில்லை.தொலைக்கல்வி வசதிகள் இல்லை.திறந்த பல்கலைக்கழக ஏற்பாடுகள் இல்லை.
அனைத்து வசதிகளும் கொண்ட சிறந்த பாடசாலை ஒன்று இல்லை.
இவை எல்லாவற்றையும் விட முசலி பிரதேசம் முழுவதும் உலமாக்களும் சனத்தொகையை விட அதிகமாக காணப்படுகிறார்கள்.
ஒரு சிறந்த மார்க்க கலாசாலையாவது நடத்தலாம்.அவ்வாறான நிலைமையும் இல்லை.எனவே! அன்பான முசலி பிரதேச மக்களே எமது எதிர்காலம் எமது சந்ததிகளுக்கு பெறுமதியானதாக வேண்டும் என்றால் இன்றே நாம் சிறந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுத்தேயாக வேண்டும்.எமது அரசியல் தலைமைகள் இதற்கு தகுதியற்றவர்கள் என்றால் அவர்களை நிராகரிப்போம்.
அல்லது தகுதியிருந்தும் உதாசீனம் செய்பவர்களாக இருந்தால் அவசரமாக மாற்று வழி யோசிப்போம்.
தாமதிக்கும் காலம் நீடிக்க நீடிக்க முசலி போதைவஸ்து நிறைந்து மூச்சுத்திணறல் ஏற்படும்.
ஒன்று படுவோம்.புரட்சிகர சமூகக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவோம்.
எஸ்.ஏ. ஸாஹிர்.