Descriptions
நளீமியாஹ் பட்டதாரி கஹட்டோவிட்ட மண்ணிண் மைந்தன் ஷெய்க் எம்.எம் முஹம்மத் அவர்கள் இலங்கை சனநாயக குடியரசின் ஒன்பதாவது தேர்தல் ஆணையாளர் நாயகமாக பதவியுயர்வு பெற்றதை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று 27.01.2018 காலை 9.30 முதல் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
"வரலாறு நெடுகிலும் இந்த நாட்டின் சட்டம் ஒழுங்கை மதித்து அதன் ஜனநாயக கட்டமைப்புகளை மதித்து இந்த நாட்டின் ஆள்புல ஒருமைப்பாடு, இறைமை, சுயாதிபத்தியம், அரசியல் ஸ்திரப்பாடு பொருளாதார சுபீட்சம் என்பவற்றிற்காக பங்களிப்பு செய்து வரும் ஒரு சிறுபான்மைச் சமூகத்தின் மைந்தன் இந்த உயர் பதவியிற்கு தனது கல்வித்தகைமை, நேர்மையான உழைப்பு, விடாமுயற்சி, அர்பணிப்பு என்பவற்றினூடாக தெரிவாகியுள்ளமை தேசத்திற்கும் சமூகத்திற்கும் பெருமை தேடித் தரும் ஒரு விடயமாகும்."
சிறப்பு அதிதியாக தேசிய ஷூரா சபையின் பொதுச் செயலாளர் என்ற வகையில் அழைக்கப் பட்டிருந்தேன், முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப், ஜமியாஹ் நளீமியாஹ்வின் உதவிப் பணிப்பாளர் உஸ்தாத் ஐயுப் அலி, முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் அல்ஹாஜ் அமீன் உற்பட கல்விமான்கள் உள்ளூர் வெளியூர் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
முற்றத்து மல்லிகையை சுவாசிக்கத் தெரிந்த கஹட்டோவிட்ட மற்றும் அண்டை கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாராட்டுக்குரியவர்கள்.
நன்றி
அஷ்ஷைக் இனாமுல்லா மசீகுதீன் முக நூல் பக்கம்.