Descriptions
கவிதை: திரு. அலிகான் ஷரீப்
இரண்டு ஊர்கள்
முசலியிலே ஒன்றிணைந்தால்
எப்போதும் வெற்றிதான்
எம்மவர்க்கு உண்டென்பேன்
தப்பான சிந்தனையால்
தமக்கு வரும் வாய்ப்பதுவை
ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை
உரிமைதனை நாமிழந்தோம்!
பதினாறு ஆயிரங்கள்
பதிவான வாக்காளர்
மதிப்பிழந்து இருப்பதனால்
மற்றவரை நாடுகின்றோம்
புதிய தலைமுறைகள்
புத்தியுள்ளோர் ஒன்றுபட்டால்
பதியாழ்வார் முசலி மகன்
பளிச்சிடுமே முசலி மண்ணே!
எம் தோட்டம் பூத்திருக்கும்
எத்தனையோ நன்மலர்கள்
நம்மக்கள் மத்தியிலே
நறுமணத்தை வீசுகையில்
அம்மலரை புறந்தள்ளி
அடுத்தவரை நாடுகின்ற
எம்மவரின் இச்செயலை
என்னவென்று கூறிடட்டும்!
வருங்கால தேர்தல்களை
வடிவாகத் திட்டமிட்டால்
பெரு வெற்றி எமக்கு வரும்
பேரதிர்ச்சி சிலரடைவர்
அருமைமிகு முதியவர்கள்
அன்புமிகு இளைஞர் எல்லாம்
ஒருங்கிணைந்து களம் கண்டால்
ஒரு போதும் தோல்வியில்லை!
படித்தவரும் அறிஞர்களும்
பண்பட்ட பெரியோரும்
துடித்தெழுந்து புறப்பட்டால்
தூரமில்லை வெற்றியது
கடினமுடன் பாடுபட்டு
களங்கண்டு போராடி
விடிவுதனை பெறுவதற்காய்
விரைந்திடுவோம் முசலி மண்ணில்!
இரண்டு ஊர்கள்
முசலியிலே ஒன்றிணைந்தால்
எப்போதும் வெற்றிதான்
எம்மவர்க்கு உண்டென்பேன்
தப்பான சிந்தனையால்
தமக்கு வரும் வாய்ப்பதுவை
ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை
உரிமைதனை நாமிழந்தோம்!
பதினாறு ஆயிரங்கள்
பதிவான வாக்காளர்
மதிப்பிழந்து இருப்பதனால்
மற்றவரை நாடுகின்றோம்
புதிய தலைமுறைகள்
புத்தியுள்ளோர் ஒன்றுபட்டால்
பதியாழ்வார் முசலி மகன்
பளிச்சிடுமே முசலி மண்ணே!
எம் தோட்டம் பூத்திருக்கும்
எத்தனையோ நன்மலர்கள்
நம்மக்கள் மத்தியிலே
நறுமணத்தை வீசுகையில்
அம்மலரை புறந்தள்ளி
அடுத்தவரை நாடுகின்ற
எம்மவரின் இச்செயலை
என்னவென்று கூறிடட்டும்!
வருங்கால தேர்தல்களை
வடிவாகத் திட்டமிட்டால்
பெரு வெற்றி எமக்கு வரும்
பேரதிர்ச்சி சிலரடைவர்
அருமைமிகு முதியவர்கள்
அன்புமிகு இளைஞர் எல்லாம்
ஒருங்கிணைந்து களம் கண்டால்
ஒரு போதும் தோல்வியில்லை!
படித்தவரும் அறிஞர்களும்
பண்பட்ட பெரியோரும்
துடித்தெழுந்து புறப்பட்டால்
தூரமில்லை வெற்றியது
கடினமுடன் பாடுபட்டு
களங்கண்டு போராடி
விடிவுதனை பெறுவதற்காய்
விரைந்திடுவோம் முசலி மண்ணில்!