புத்தர் சிலை உடைப்புக்கும் வெடிபொருட்கள் கண்டெடுப்புக்கும் தொடர்பா? விசாரணை தீவிரம்
Not allow reviews
Descriptions
புத்தளம், வனாத்தவில்லு, கரடிபுவல் பிரதேச தென்னை மர தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் 90 நாட்கள் வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் புலனாய்வுத் துறையினருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
மாவனல்லைப் பிரதேசத்தில் புத்த சிலை உடைப்புச் சம்பவம் தொடர்பான மேலும் பல சந்தேக நபர்களைத் தேடி குற்றப் புலனாய்வுத் துறையினர் மேற்கொண்டுள்ள விசாரணை நடவடிக்கையின் போது இந்த வெடிபொருட்களைக் கைப்பற்ற முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வனாத்தவில்லு பிரதேசத்தில் தென்னை மர தோட்டத்தில் இருந்து சுமார் 100 கிலோ கிராம் எடையுடைய வெடிபொருட்கள், மேலும் 100 டெட்டனேட்டர்களும் இரசாயன பொருட்களும் கடந்த 17 ஆம் திகதி கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து அன்றைய தினமே (17) குறித்த பண்ணையின் உரிமையாளர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
குறித்த வெடிமருந்து எவ்வகையானது என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட நிபுணர்கள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மூன்று CID குழுக்கள் விசாரணை நடத்தி வருவதாக குற்றவியல் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட இடத்தைச் சுற்றி பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.