ஸ்ரீரிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அவர்களுக்கு முசலியிலிருந்து பணிவான வேண்டுகோள்!..
Not allow reviews
Descriptions
ஸ்ரீரிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் திரு.றவூப் ஹகீம் அவர்களே! நீங்கள் கூறினீர்கள், நாம் மக்கள் நலனை முன்னிறுத்துவோம்.
கடந்த தேர்தலில் முதல் முசலி மக்களின், ஒவ்வொருவரினதும் உரிமையும் முன்னேற்றமும் வளர்ச்சி பாதையில் நானும் எனது கட்சியும் சோர்ந்து எடுத்துச் செல்வோம், வன்னிக்கான தேசிய பட்டியல் பாரளுமன்ற உருப்பினர் வெற்றிடத்தை சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் அவர்களுக்கு வழங்குவேன் என்று வாக்குறுதி அழித்தீர்கள்.
ஆனால் எந்தவித செயல்பாடுகளும் நடந்தேரியதாக தெரியவில்லை.
ஒரு மாபெரும் தலைவரை நாங்கள் பெற்றுள்ளோம் என்ற நம்பிக்கையில்தான் எங்கள் அத்துனை சக்த்திகளையும் பிரயோகித்து மக்களை வாக்களிக்க செய்தோம். ஆனால் வன்னி மக்களை வழி நடத்தி சென்ற சக்தி வீழ்ந்திருக்கிறது (சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக்)என்பது நிதர்சனமான உண்மை.
இச்சூழலில், ஸ்ரீரிலங்கா முஸ்லிம் காங்கிரசின் போராளிகள் முத்திரை குத்தப்பட்டு சூழ்நிலை கைதிகளை போன்று காணப்படுகின்றனர்.
அரசியல் அதிகாரங்களை எல்லாம் எம்மக்கள் மீது பிரயோகிக்கடுகிறது நாங்கள் சூழ்நிலை கைதிகளாக ஆகியுள்ளோம்.தாயை போன்று தனது கட்சியை நேசிக்கின்றவர்களுக்கு நீங்கள் செய்யும் கைமாருதான் என்ன என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மக்கள் நலனே முக்கியம், அவர்களுக்கு உரியவைகளை, உரிமைகளை நாம் பெற்று தந்தால் பதவிகள் எல்லாம் உகந்த நேரத்தில் மக்களே அழைத்து கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையை வேட்பாளர்களாக களம் இறங்கியவர்கள் அறைகூவியது மறந்து போகவில்லை. வன்னி மக்களை பாதிக்கும் ஸ்ரீரிலங்கா முஸ்லிம் காங்கிரசின் நடவடிக்கைகளால் உங்களது வாக்கு வங்கியில் கணிசமான சரிவை எதிர்காலம் சந்திக்க நேரிடும் இந்த நடவடிக்கை மேலும் தொடருமாயின் எதிர்கல அரசியல் நடவடிக்கைகளுக்கு எந்த வித தயக்கமும் பயமும் இன்றி மக்களுடன் தோளோடு தோள் சேர்ந்து நின்று, பெற வேண்டிய உரிமையை பெறுவதற்கு முழக்கமிட்டால், வன்னியின் ஒட்டு மொத்த மக்கள் தொகையும் எதிர் பக்கம் இருக்கும் என்று நாங்கள் பதிவு செய்ய விரும்புகிரோம்.
நான் ஆதரித்த கட்சி , ஆட்சி பீடத்தில் அமர நானும் உழைத்திருக்கிறேன் என்ற உரிமையிலும், எனது ஆதர்ஷ நாயகன் புரட்சி தலைவர் ஆரம்பித்த கட்சி, வளர்த்து கட்டி காத்த கட்சி என்பதன் அடிப்படையிலும் இந்த ஆட்சி நீடித்து, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் எனவும், பல முறை கூறியிருக்கிறோம். தற்போது ஸ்ரீரிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவாளர்கள் எதிர்கொள்ளும்,இடர் கண்டு வேதனை அடைகிறோம்.
எனவே கடந்தகாலம் மறக்கப்பட்டவையாகட்டும் எதிர்காலத்தில்
சரியான முறையில் நிகழ்ச்சி நிரல்களை திட்டமிட்டு மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான கட்சியாக உருவெடுக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்தவனாக.....
மக்கள் நேசன்