Descriptions
- ஜெஸார் ஜௌபர் -
கொழும்பு மாவட்ட முஸ்லிம்களின் கல்வியை முன்னேற்ற அசாத் சாலி சில ஆண்டுகளுக்கு முன்னர் முன்வைத்த ஆலோசனைகளை தற்போது நடைமுறைப்படுத்த தயாரிகிவிட்டார்.
கொழும்பு மாவட்டத்தின் கல்வியை முன்னேற்ற றமழான் விடுமுறையை ரத்துச்
செய்து பாடசாலை நடாத்துவதன் மூலம் எப்படி கல்வி முன்னேறப்போகின்றது என்பது
விளங்கவில்லை.
மத்திய கொழும்பு கல்வி வலயத்தில் சிறிய முஸ்லிம் பாடசாலைகள் சில மூடப்படும் கட்டத்தை அண்மித்துவிட்டன. அடிப்படை வசதிகள் இல்லை. மாணவர்கள் சேர்வு குறைந்துவிட்டது. ஆசிரியர்களோ ஏனைய வழங்களோ இல்லை. அவை இன்னும் சில வருடங்களில் மூடப்படும் அபாயத்தை அண்மித்துவிட்டன.
மத்திய கொழும்பு பாடசாலைகளில் மிகத் தீவிரமான இட நெருக்கடி நிலவுகிறது. தற்போது பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கான எந்த ஏற்பாடுகளுமில்லை. உதாரணமாக தெமடகொட பாடசாலை ஒன்றின் ஒரு பகுதி சில வருடங்களாக தகரத்தினால் செய்யப்பட்ட வகுப்பறைகளில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இன்னுமொரு பாடசாலையின் சில வகுப்பறைகள் கெண்டைனர் பெட்டிகளில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
தரம் ஒன்று மாணவர் அனுமதிக்கான போராட்டம் வருடா வருடம் அதிகரித்துச் செல்கிறது.
ஒவ்வொரு பாடசாலைகளிலும் சேர்ப்பதற்கு அனைத்துத் தகுதியும் உள்ள இன்னுமொரு வகுப்பறையை ஆரம்பிக்கக் கூடிய மாணவர்கள் தொகை அனுமதிக்கப்படாமல் காத்துநிற்கின்றது. எத்தனை இலட்சமானாலும் வழங்கி பாடசாலை அனுமதியை பெற்றுவிட வேண்டும் என்ற நிலைக்கு பெற்றோர் தள்ளப்பட்டுவிட்டனர்.
கொடிகாவத்த, வெல்லம்பிட்டி, கொலன்னாவ, தெமடகொட முதலான முஸ்லிம் குடியேற்றங்களால் நிரம்பி வழியும் பிரதேசத்தின் பிள்ளைகளுக்கு ஒரு பாடசாலையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற போராட்டம் பல வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்தப் பிரதேசத்தின் பிள்ளைகள் தூரம் மற்றும் இதர காரணங்களால் அரச பாடசாலைகளினால் அனுமதி மறுக்கப்பட்டு வேறு வழியின்றி சர்வதேச பாடசாலைகளை நாடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
சாராயக் கடைகள், ரேஸ் நிலையஙகள் என்று கூட பாராமல்
இப்பிரதேசமெங்கும் சர்வதேச பாடசாலை என்ற கடைகளின் வியாபாரம் தாராளமாக நடக்கின்றது.
கொழும்பு மாவட்ட முஸ்லிம் கல்வியிக்கான அடிப்படைகளே ஆட்டம் கண்டிருக்கும் நிலையில் கல்வியை முன்னேற்ற றமழானில் பாடசாலையை நடாத்தும் திட்டத்தை பிரேரித்த மைத்திரியின் அஸாத் சாலியை என்ன வென்பது?