Descriptions
அலைபேசி போன்ற தொழில்நுட்ப கருவிகளின் திரைகளில் அதிக நேரத்தை செலவிடுவது அவர்களது உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புள்ளதாக குழந்தை நல மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
தங்களது குழந்தைகளின் உடல்நலத்தில் தொழில்நுட்ப கருவிகளின் திரைகள் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்று சரிவர பரிசோதித்த பெற்றோர்கள் பெரியளவில் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று மருத்துவர்கத்ள் தெரிவிக்கின்றனர்.
குழந்தைகள் எப்போதெல்லாம் அலைபேசி போன்ற தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தலாம் என்பதற்கு தக்க வரப்புகளை பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டுமென்றும், குறிப்பாக படுக்கைக்கு செல்வதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு கண்டிப்பாக அதை அனுமதிக்கக்கூடாது என்றும் மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள்.