Descriptions
சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய சார்ஜன் பாலித விஜேசிரி எதிர்வரும் 15 ஆம் திகதி (15.01.2019) இடமாற்றம் பெற்றுச் செல்கிறார்.
முசலிப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களிலும் மரக்கன்றுகளை நாட்டி தண்ணீர் ஊற்றி வளர்க்கும் உன்னத பணியினை தன்னந்தனியே நின்று செய்து வருபவர்.
வீதியில் மரக்கன்றுகளைப் பராமரிக்கும் வகையில் முசலி மக்களால் நன்கறியப்பட்ட விஜேசிரி எல்லோருடனும் இன்முகத்துடன் பழகுபவர்.
தனது மரக்கன்று வளர்ப்புப் பணிக்கு சிலாவத்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி முழு ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறுவார்.
சார்ஜன் பாலித விஜேசிரியின் வலிந்து மேற்கொள்ளும் சமூக சேவையினைப் பாராட்டி செ,ன்ற ஆண்டு வட மாகாண சபையால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
லஞ்சம், ஊழலற்ற ஒரு சிறந்த - முன்மாதிரியான பொலிஸ் உத்தியோகத்தராக சார்ஜன் விஜேசிரியைக் காண்கிறேன்.
பிறருக்கு உதவி செய்வதும் சூழலைப் பாதுகாப்பதுமே தனது வாழ்க்கையின் இலட்சியம் எனக்கூறும் விஜேசிரி நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன்.
- முகுசீன் றயீசுத்தீன் -