Descriptions
மகளிர் பாடசாலைகள் விடுகின்ற நேரத்தை அறிந்து வைத்து நேரந்தவறாமல் வீதியோரத்தில் வந்தமர்ந்து, போகின்ற- வருகின்ற பெண் பிள்ளைகளை பார்த்து ரசிக்கின்ற #இளைஞனே!
டியூஷன் முடியும் வரை டியூட்டரி வாயில்களுக்கு முன்னால் காத்திருந்து மாணவிகளின் வீட்டு வாயில் வரை பின் தொடர்கின்ற #சகோதரனே!
பாலத்தடிகளில் குந்திக் கொண்டு, கல்வி தேடிப் பயணிக்கும் பெண் பிள்ளைகளிடம் சேஷ்டை விட்டுக் கொண்டு, நீயும் படிக்காமல் படிக்கின்ற பிள்ளைகளையும் படிக்க விடாமல் காலத்தை வீண்டிக்கும் #நண்பனே!
போ(B)க்கடிகளில் நண்பர்கள் நாலு பேரோடு சேர்ந்து #என்ட்ரொய்ட்_தொலைபேசியில் எதிர்காலத்தைத் தொலைத்து விட்டு, எதையெதையோ தேடிக் கொண்டிருக்கும் நிகழ்கால கனவுக்_கதாநாயகனே!
இவற்றுக்காக செலவிடுகின்ற உனது பெறுமதிமிக்க நேரங்களை உனது வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பயன்படுத்துவாயானால் வாழ்க்கையில் உன்னை யாராலும் பிடிக்க முடியாது. ஏணி வைத்தாலும் எட்ட முடியாத தூரத்திற்கு உன்னால் பயணிக்க முடியும்.
நீ காத்திருக்கின்ற, தேடுகின்ற அந்த பெண்ணை விட பல மடங்கு தகுதி வாய்ந்தவள், அழகானவள், திறமையானவள் உன் வீடு தேடி வரும் காலம் வரும் என்பதை மறந்து விடாதே. ஆனால், நீ சிந்திப்பது இல்லை. காலத்தைத் தொலைத்துவிட்டு, காலம் சென்ற பின்னர் கவலைப்படுவதால் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை என்பதை மனதில் கொள் சகோதரனே.
ஒருவேளை, நீ காதலில் வெற்றியடைந்தாலும், நீ காதலித்த அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய மட்டுமே முடியும். வேறு சாதனைகள் எதையும் நிகழ்த்த முடியாது. அவளைத் திருமணம் செய்வதே #வாழ்நாள்_சாதனைதான் என நீ நினைப்பாயானால் அதற்காக என்னால் வருத்தப்பட மட்டுமே முடியும். என்னால் வேறொன்றும் சொல்ல முடியாது.
பிள்ளைகளைப் பெற்று ஊர் மேய விட்டிருக்கும் பெற்றோரே!
இது_உங்களுக்காகவும்தான்.
நாஸிக்_மஜீத்
2018.12.09