மீள்குடியேற்ற செயலணிக்கு எதிராக செயற்படுவோர் மீது முசலி பிரதித் தவிசாளர் கண்டனம்
Not allow reviews
Descriptions
கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழிருந்த மீள்குடியேற்ற செயலணிக்கு கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை பிச்சிப் பிடுங்குவதில் சில தமிழ் அரசியல்வாதிகளும் வன்னி முஸ்லிம் பிரதியமைச்சரும் ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் என கங்கணங்கட்டித் திரிந்ததால் தான் அந்நிதி செயலணிக்கு வந்து சேர தாமதமாகியது.
இதுவே வடக்கு முஸ்லிம் பிரதேசங்களில் முன்மொழியப்பட்ட பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பின்னடைந்தமைக்கும் கோடிக்கணக்கான ரூபா பணம் திரும்பிச் செல்கின்றமைக்கும் பிரதான காரணமாகும்.
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற அபிவிருத்திக்கு 2018 ஆம் ஆண்டு பாரிய தடையாக இருந்து செயற்பட்ட குறித்த தமிழ் அரசியல்வாதிகளுக்கும் வன்னி முஸ்லிம் பிரதியமைச்சருக்கும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
முசலிப் பிரதேச சபை பிரதித் தவிசாளர்
முகுசீன் றயீசுத்தீன்