பரீட்சை மண்டபத்தில் கலாசார உடைகள் தொடர்பான அத்துமீறல்கள் நிகழ்ந்தால் உடனடியாக உங்கள் பாடசாலை அதிபரையோ ஆசிரியர்களையோ தொடர்பு கொள்ளுங்கள்.
Not allow reviews
Descriptions
- ஜெஸார் ஜௌபர் -
ஆரம்பமாகும் க. பொ.த சாதாரண தரப் பரீட்சை யில் கலாசார ஆடை அணிந்து ஏதேனும் பிரச்சனை வந்தால் உடனடியாக குரல்கள் அமைப்பிற்கு அழைக்குமாறு ஒரு அறிவித்தல் பகிரப்படுகின்றது.
பரீட்சைகளில் ஆள் அடையாளம் என்பது முக்கியமானது. பல்வேறு ஆள்மாறாட்டங்கள் மற்றும் இதர பரீட்சை மோசடிகள் தொடர்பாக கடந்த காலங்களில் பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. குறிப்பாக பர்தா மற்றும் முகமூடிய ஆடைகள் என்பனவற்றுடன் சில பாரதூரமான சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இதன் பின்னர் பரீட்சை மேற்பார்கவையாளர்களுக்கான அறிவுறுத்தலில் பரீட்சைகள் திணைக்களம் 'மேற்பார்வையாளர் திருப்தியுறும் விதத்தில்' எனும் வகையில் அறிவுத்தல்களை வழங்கியது.
கடந்த காலங்களில் ஒவ்வொரு பரீட்சை மேற்பார்வையாளர்களும் தமக்கு ஏற்றால் போன்று 'திருப்தியுறும் அளவை' அமைத்துக் கொண்டனர்.
இதன் பின்னர் தான் பல்வேறு அத்துமீறல்கள் இடம்பெற்றன. அவை பல்வேறு தளங்களில் பேசு பொருளாகின.
தற்போது குரல்கள் அமைப்பின் பேரில் சுற்றுகின்ற அறிவித்தலின் படி அத்துமீறல் ஒன்று நடைபெறும் போது உடனடியாக குரல்கள் அமைப்பை தொடர்பு கொள்ளும் ஒருவரின் முறைப்பாட்டை அவர்கள் பதிந்து கொள்வார்கள். அதற்கான ஏற்பாடுகள் மாத்திரமே உள்ளன.
விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணைத் தொடர்பு கொண்ட போது அவர்களிடம் உடனடி நடவடிக்கைகளுக்கான எந்த ஏற்பாடும் இல்லை என்பது உறுதியாகியது.
நாம் எம்மைத் தொடர்பு கொள்ளுமாறு தான் கூறுகிறோம். தீர்வு தருவோம் என்று கூறவில்லை
என்று பதில் தருகிறார்கள்.
எனவே,
குரல்கள் அமைப்பு வௌியிட்டுள்ள அறிவித்தல் / விளம்பரத்தில் தௌிவாக அதனைக் குறிப்பிடுவது குழப்பங்களைத் தவிர்க்க உதவும்.
ஏனெனில் அவ்வாறான பிரச்சினைக்கு உட்படும் ஒருவர் முதலில் உடனடியாக மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கை பரீட்சை எழுதுவதை உறுதி செய்வதாகும்.
அ்வ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் மாணவர்களின்
பெற்றோர்களே உங்களது பிள்ளையின் பாடசாலை அதிபரை யோ ஆசிரியரையோ தொர்பு கொள்ளுங்கள். அவர்களின் ஊடாக வலயக் கல்விப் பணிப்பாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளுங்கள்.
அவர்கள் ஊடாக உடனடியாக பரீட்சை மண்டபத்திற்குள் பொதுவான கட்டுப்பாடுகளுடன் பரீட்சை எழுதுவதை உறுதிப்படுத்த முயற்சி செய்யுங்கள்.
சட்ட ரீதியான நடவடிக்கைக்களுக்கு செல்வது நல்லது தான்.
ஆனால் இப்பிரச்சினையை வளர்க்கும்
பரீட்சை திணைக்களம் சேர்ந்துள்ள 'மேற்பார்வையாளர் திருப்தியுறும் விதத்தில்' என்ற அறிவித்தல் தொடர்பாக பரீட்சைத் திணைக்களத்துடன் கலந்துரையாடி தீர்வு காண்பது அதனை விட முக்கியமானது.