Descriptions
மாற்றத்துக்கான கல்வி எழுச்சி மாநாடு 2018 எனும் தொனிப்பொருளில் புத்தளம் வேப்ப மடு அர் ரஹ்மா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் மாற்றங்கள் தேடி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கல்வி எழுச்சி மாநாடு மற்றும் பரிசளிப்பு நிகழ்வு என்பன கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் கலந்துகொண்டார்.
ஐந்து பாலர் பாடசாலைகள் 5 பாடசாலைகள் மற்றும் மூன்று குர்ஆன் மத்ரஸாக்கள் அடங்கலாக 300 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் நிகழ்வில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களை பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களும் ஏனைய பிரமுகர்களும் வழங்கிவைத்தனர்.
குறித்த நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் மற்றும் முசலி பிரதேச சபையின் தவிசாளர் சுபியான் உட்பட அப் பிரதேச சபையின் உறுப்பினர் கே எம் இக்பால் ஆகியோருடன் முஸ்லிம் உதவும் கரங்கள் அமைப்பின் பணிப்பாளர் ஏ.எம்.மிஹ்லார் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.