Descriptions
- எம்.என்.முஹம்மத் -
உலகம் பல மாற்றங்களைக் கண்டுள்ளது நாம் ஒன்றையும் கண்டு கொள்வதில்லை,நாம் பாவிக்கும் உபகரணங்கள் மாறி உள்ளன ,எமது தொடர்பாடல் முறைமைகள் மாறியுள்ளன .இவை எல்லாவற்றையும் விட மனிதன் கற்றுக் கொள்ளும் முறை மாறியுள்ளது.
20 ஆம் நூற்றாண்டின் முறைமைகள் 21 ஆம் நூற்றாண்டிற்கு பொருந்தாது .எமது அறபு இஸ்லாமிய கலாசாலைகளி்ல் பிள்ளைகள் 5-7 வருடங்கள் கற்கின்றனர் .இந்தக் கால எல்லை சரிதானா! இன்று அனேகமாக பல மூல நூல்கள் குர்ஆன் ,சுன்னா உற்பட இலத்திரனியல் வடிவத்தைப் பெற்றுள்ளது மட்டுமன்றி ,பல மொழிகளில் இலகுவாக கிடைக்கக் கூடியதாக உள்ளது .எனவே எதைக் கற்பிக்க வேண்டும் ,எப்படி கற்பிக்க வேண்டும் ,எவ்வளவு காலம் கற்பிற்க வேண்டும் என்பது தொடர்பில் விரிந்த கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும்.
அறபு மொழியை மிகச் சரியாக கற்பித்து,மாணவர்கள் தானாக தேடிக்கற்கும் கலாசாரம் வளர்கப்படும் போது .கால தேவைகளிற்கு ஏற்ற முடிவுகள் வரும்.
ஒரு குறிப்பிட்ட சிந்தனைப் பாரம்பரியத்தை மட்டும் ,வழங்க நினைப்பது ,செயற்படுத்துவது பிழையானது .
நான் இங்கு அறபு மத்ரசாக்களை மட்டும் குறிப்பிடவில்லை இஸ்லாமிய கலாபீடங்களையும் கூடத்தான் .நான்கு மதில்களில் அடைபட்டு வாழும் பரம்பரையால் சமூகப் பிரச்சினைகளை கையாள முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் .மாற்றம் என்ற சொல்லைத் தவிற உலகில் எல்லாம் மாறுகின்றது ,குர்ஆன் ,சுன்னா தவிர்ந்த மற்ற எல்லா விடயங்களையும் மீள்பரீசிலனைக்கு உற்படுத்தக் கூடியது .
எனவே துறைசார் நிபுணத்துவ கலந்துரையாடல்களை மேற்கொண்டு மாற்றங்களை ஏற்படுத்த முன்வர வேண்டும்.