Descriptions
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மேத்தன்வெளி, பண்டாரவெளி கிராம சேவகர்பிரிவு எல்லைகளில் அமைந்துள்ள
அல்லிராணிக் கோட்டை முதன் முதலில் போத்துக்கீசரால் கட்டப்பட்டது.
ஆயினும்
இலங்கையின் கரையோரத்தை நிர்வகித்த முதலாவது பிரித்தானிய ஆளுநரே பிரட்ரிக் நோர்த் (கி.பி.1798 - 1805). இவர் கரையோர வர்த்தகத்தை கண்காணிக்கும் முகமாகவும் தமது வாசஸ்தலமாகவும் இந்த மாளிகையை பயன்படுத்தி வந்துள்ளார்.
இம் மாளிகையானது இலங்கையில் உள்ள மிகவும் அழகான வீடாகவும் வீட்டு நிர்மாண கலைக்கு அமைவாக கட்டப்பட்ட கட்டடமாகவும் உள்ளது என பிரித்தானிய எழுத்தாளரான ஜேம்ஸ் கொர்டினர் பாதிரியார் கி.பி.1807 ஆம் ஆண்டு தான் எழுதிய “ரசித டிஸ்கிரிப்ஷன் ஒவ் சிலோன்” என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் மக்கள் இந்த மாளிகையை அல்லிராணி கோட்டை என்றே அழைக்கின்றனர். கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்ட இந்த அல்லிராணி கோட்டை இராவண்ணன் காலத்தில் கட்டப்பட்டுள்ளது என்றும், மன்னராட்சிக் காலத்தில் அல்லி என்ற ராணி இந்த மாளிகையில் வசித்தார் என்றும், மற்றுமொரு மரபுவழி கதை கூறுகிறது.
தற்போது மன்னாரில் பிரபல்யமான சுற்றுலா இடம்பெறும் தளமாக அல்லிராணி கோட்டை காணகாணப்படுவது குறிப்பிடத்தக்க து.
யுத்ததினால் புனரமைக்காது விடப்பட்ட அல்லிராணிக் கோட்டையை அரசாங்கம் புனரமைத்துத் தரும்படி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
நன்றி: மன்னார் மக்கள் குரல்