சிலாவத்துறை வைத்தியசாலைக்கு ஒதுக்கப்பட்ட நிதி முடக்கப்பட்டமைக்கு காரணம் யார்..?
Descriptions
எம். என். எம். பாரிஸ் சிலாவத்துறை
இவ்வருடம் (2018) சிலாவத்துறை வைத்திய சாலை அபிவிருத்திக்காக சுமார் 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை அவசியமான எந்தவித அபிவிருத்திகளும் செய்யாத நிலையில் சுமார் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி முடக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
இந் நிதி அனைத்தும் முசலிப் பிரதேச செயலகத்திற்கே அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரித்துப் பார்த்த வகையில் அறியக்கிடைப்பதாவது; முசலிப் பிரதேச காரியாலயமும், அங்குள்ள சில பிணாமிகளுமே முற்றுமுழுதான காரணமாக அமைந்தமை தெரியவந்துள்ளது.
முசலிப் பிரதேசத்தின் அபிவிருத்திக்காக வரும் நிதியை குறித்த பிரதேசத்தில் சரியாக பயன்படுத்தத் தெரியாத இந்த காரியாலயமும், அதற்கு பொறுப்பான அதிகாரிகளும் எமது பிரதேசத்திற்கு தேவைதானா? முசலிப் பிரதேசத்தின் அபிவிருத்திக்காக நிதியை கொண்டுவந்து சேர்ப்பதே ஒரு பெரிய சாவாலாக காணப்படும் நிலையில் வந்த நிதியை முடக்கி திருப்பி அனுப்பியது மிகப்பெரிய அநீதியாகும்.
இந் நிதி திருப்பப் பட்டதற்கான முக்கியமான காரணமாக அங்குள்ள ஒரு பெரிய பிணாமி சிலாவத்துறை வைத்திய சாலை அமைந்துள்ள இடம் அதிக தனியார் காணிகளை கொண்டுள்ளதாக மேலிடங்களுக்கு கடிதம் அனுப்பி இருப்பதாகவும் தெரியவருகிறது.
அந்த இடங்கள் தனியார் காணிகள் என்றால் அந்த இடத்தில் கட்டிடங்கள் கட்டுவதற்கு முன்பே அப் பிரச்சினைகளை தீர்த்து வைத்திருக்க வேண்டும். ஆனால் கட்டிடங்களை கட்டிவிட்டு இந்த நிதியை முடக்கியதற்காக இவர்கள் கூறும் காரணங்களை கேட்கும் போது சகிக்கமுடியாதுள்ளது.
சிலாவத்துறை வைத்திய சாலை காணியை பொருத்த வரையில் அங்குள்ள அதிக காணிகள் போமிட் மாத்திரம் கொண்டவை. அந்த போமிட் காணிகளுக்கு மாற்றுக்காணி வேறொரு இடத்தில் கொடுப்பதற்கான வேலைத் திட்டங்கள் முடிவடைந்துள்ளது.
இந்த பிணாமி முசலிப் பிரதேசத்திற்கு வரும் அபிவிருத்திகளை முடக்கி கூறுபோடுகின்ற செயல் அனைத்தும் இனவாதத்தை கக்குவதாக உள்ளது.
கௌரவ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களே...!
இந்த முசலிப் பிரதேசத்தில் உள்ள பெரிய பிணாமிக்கும் இடமாற்றம் வந்தும் உங்கள் கட்சியை சேர்ந்த ஒரு சில அதிகார பிணங்களின் சுகபோக வாழ்க்கைக்கான வேண்டுகோளிற்கிணங்க நீங்களே அந்த பெரிய பிணாமியின் இடமாற்றத்தை இடைநிறுத்தியதாக கேள்விப்பட்டோம்.
ஒரு சிலரின் சுகபோகங்களை விட பொது மக்களின் வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு உங்கள் கைகளில் உள்ளது.
நீங்கள் முசலி மக்களின் தேவைகள் விடையத்தில் கட்சி அரசியலுக்கு அப்பால் பொறுப்படையதாக நடக்கவேண்டும் என மக்களாகிய நாம் வினையமாக கேட்பதோடு சிலாவத்துறை வைத்தியசாலையின் துரித அபிவிருத்திக்கு தங்களது மீள்குடியேற்ற அமைச்சினூடாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகிறோம்.
.