Descriptions
மாமனிதர் மஷூர் ஹாஜி
மண்ணறைக்கு சென்ற
நினைவு நாள் !!
வஞ்சகமில்லா நெஞ்சியுந்தன்
வதனம் கண்டாலே
வானத்து நிலவுகூட
நின்றுன்னைப் பார்க்கும்
அரசியலுக்குமுன்
அரியாசனதில் நீ
அமர்ந்து அலகரித்தவன்
குணத்தால் வென்று
பணத்தால் உயர்ந்தவன்
பண்பால் பாசப்படைப்பாளி
பகிர்வதில் கொடையாளி
புன்னகையால் புரட்டியே
கன்னம் வைத்தோரையும்
காந்தக் கண்ணழகால்
கவர்ந்திழுத்த மனிதமாமணி
இறைவனை இடைவிடாது
வணங்கிய சுவர்க்கவாதி
காலம்உன்னை வென்றது
ஆலம்கூட்டிச் சென்றது
ஆண்டுகள் உறுண்டாலும்
மாண்டு போகவில்லை என்
மனம் நிறைந்த நினைவுகள்
கண்ணீரை கவிதையாக்கினேன்
என்றும் பாசமுள்ள
கவிக்குரல் மன்சூர்
2018 , 12 , 02
""""""""""""""""""""""