Descriptions
நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் படி தற்பொழுது நாட்டில் பிரதமரோ, அரசாங்கமோ இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
இதன்படி, அடுத்துவரும் 24 மணி நேரத்துக்குள் தான் இது தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இன்று (03) இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
ஐ.தே.கட்சியின் தீர்மானம் பிரதமராக ரணில் விக்ரமசிங்க வரவேண்டும் என்பது. ஆனால், ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி உள்ளார். தற்போதைய ஜனாதிபதியின் தீர்மானம் நாட்டு அரசியல் பிரச்சினைக்கு தீர்வாக அமையுமா? மேலும் பிரச்சினையை அதிகரிக்குமா? என்பது பலரினதும் எதிர்பார்ப்பாகவுள்ளது.