Descriptions
முசலிப் பிரதேசம் சுமார் 500 சதுரகிலோ மீற்றர் பரப்பையும் சுமார் 30 ஆயிரம் மக்களையும் கொண்டுள்ளது. இப்பிரதேசம் தனியான சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவாகும்.
இப்பிரதேச மக்கள் வைத்திய தேவைக்கு நாடுவது சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலைக்காகும். இவ்வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பில் இனவாதம் கொண்ட வட மாகாண சபை எதிர்மறையாகவே செயற்பட்டது.
2018 ஆம் ஆண்டு சிலாவத்துறை வைத்தியசாலை அபிவிருத்திக்கென 3 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மன்னார் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் அலுவலகம் (RDHS) இந்நிதிக்கான வேலைகளுக்குப் பொறுப்புடையது. ஆனால் இந்நிதியை செலவளிப்பது குறித்து இவ்வலுவலகம் ஆரம்பம் முதலே பொடுபோக்குடன் செயற்பட்டு வந்தமை முன்னர் ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டது.
தற்போதைய நிலையில் சுமார் ஒரு கோடி ரூபாவுக்குள் அந்நிதி சிலாவத்துறை வைத்தியசாலைக்கு செலவளிக்கப்பட்டு மிகுதி 2 கோடி ரூபா நிதி திருப்பப்படுவது கவலைக்குரியதாகும்.
- முகுசீன் றயீசுத்தீன் -