Descriptions
வட்டக்கடி என பொதுவாக சொல்லப்படும்,
பங்கசுக்களின் தொற்றுக்களால் ஏற்படக்கூடிய ஒரு வகையான தோல் பிரச்சனை தான் படர்தாமரை. இது மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடிய ஒரு தொற்றுநோயாகும். இதை ஆரம்பத்திலேயே சரிசெய்துவிட்டால் பிரச்சனை இல்லை. இந்த படர்தாமரை ஒருவருக்கு உடலின் தலை , கால் , அக்குள் , இடுப்பு ( அரை ) மட்டுமல்லாது எந்த பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். சருமத்தில் படர்தாமரை உடலில் நேரடியாகவோ மற்றும் மறைமுகமாகவோ ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும்.
இதன் அறிகுறிகள் வட்ட அல்லது வளைய வடிவாகவும் , மிகுந்த அரிப்புடையதாகவும் , சிவந்தும் இருக்கும் .
இதனால் விரைவில் பாதிக்கப்படுபவர்கள்
அதிகம் வியர்ப்பவர்கள் , ஆடைகளை பகிர்ந்து அணிபவர்கள் , நோயெதிர்ப்பு குறைந்தவர்கள் ,
படுக்கையை மற்றும் towelஐ பகிர்ந்து கொள்பவர்களாக இருப்பர் .
இதை இலகுவாக் குணப்படுத்த பின் வரும் சுகாதார ஆலோசனைகளைப் பேணவும் .
1 . தினமும் இரு முறை தொற்றுநீக்கி சவர்க்காரம்
கொண்டு குளிக்கவும்
2 . ஒரு முறை கழற்றிய ஆடைகளை மீண்டும்
கழுவாமல் அணிய வேண்டாம்
3 . மிகவும் சுத்தம் பேண வேண்டும்
4 . மற்றும் மேலைத்தேய toilet use
பண்ணுபவர்கள் , தொடைகளில் இருக்கும்
சிரங்குகளில் அவதானமாக இருக்க வேண்டும்
ஏனெனில் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் பரவ
அதிக வாய்ப்புண்டு .
இதை தவிர்க்க toilet பாவித்த பின்
இருக்கைகளை நன்கு நீரால் கழுவி
விடவேண்டும்
5 . மற்றும் உங்கள் ஆடைகளை , துடைக்கும்
துணியை , படுக்கையை பகிர வேண்டாம் .
இதற்கு பயன்படுத்தக்கூடிய மருந்துகள் மேலைத்தேய மருந்துகள் பின்வருவன
Cream வகைகள்
1 . Miconazole cream
2 . Clotrimazole cream
3 . Terbinafine cream
குளுசை வகைகள்
1 . Griseofulvin 500 mg இரவு சாப்பாட்டின் பின்
குறைந்தது 2 வாரங்களுக்கு
2 . Fluconazole 150 mg வாரத்துக்கு ஒரு
முறைப்படி 4 வாரங்களுக்கு
இவற்றில் ஏதாவது ஒரு creamஐயும் இரு குளுசைகளையும் பாவித்து வந்தால் முற்றாக குணப்படுத்த முடியும் .
இதே cream வகைகளை தேமலுக்கும் பாவிக்க முடியும் . அதே சுகாதார ஆலாசனைகளையும் பேண வேண்டும் .
Dr Cegu isadeen Mohamed Hassan Soofi
Sri lanka 🇱🇰
நன்றி: ஹஸ்ஸான் சூபி முகநூலில் இருந்து.