இளம்வயதில் மருத்துவத்துறையில் MRCP (UK) பட்டம் பெற்ற வைத்தியர் அலி அக்றம் அலி உதுமான்.
Descriptions
நன்றி: சிறாஜ் மஸ்ஹூர்
சளைக்காமல் தனது உயர் கல்வியைத் தொடர்ந்து, இப்போது MRCP (UK) ஆகியிருக்கும் அலி அக்றம் அலி உதுமானுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
அசாதாரண திறமைகளும் பன்முக ஆற்றல்களும் வாய்க்கப்பெற்ற அலி அக்றம், மிக இளம் வயதிலேயே மருத்துவத் துறையில் இந்த உயர் அடைவை அடைந்திருக்கிறார்.
அநுராதபுரத்திலுள்ள ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவத் துறையின் முதல் தொகுதி மாணவனான இவர், தனது MBBS பட்டப் படிப்பின்போதே 6 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தவர்.
இவர், 1989 இல் ENDLF இனரால் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அலி உதுமான் சேரின் மூத்த புதல்வர் என்பது குறிப்பிடத் தக்கது.
Dr. AA. Ali Uthuman
MBBS (Rajarata)
MD Medicine (Colombo)
MRCP (UK).
Dr. அலி அக்றமிற்கு அக்கரைப்பற்று மக்கள் பாராட்டு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது என் அவா.
அவரே சொல்லியிருப்பது போல், அவரது வாப்பாவும், உம்மம்மாவும் உயிரோடிருந்திருந்தால், இத்தருணத்தில் மிகவும் புளகாங்கிதம் அடைந்திருப்பர்.
ஈன்றபொழுதில் தன்மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்...
அன்புச் சகோதரனே, உங்களது மகிழ்ச்சியில் நாங்களும் பங்கெடுக்கிறோம்.
முந்திய தலைமுறையினரின் சமூக-அரசியல் போராட்டங்கள் வீண் போவதில்லை என்பதற்கு நீங்கள் உயிர் சாட்சி.
இதைவிட வேறென்ன வேண்டும்?