சவூதி இளவரசர் முகம்மது பின் சல்மான் மீது சட்டநடவடிக்கை எடுக்கவும் - Human Rights watch
Not allow reviews
Descriptions
ஆர்ஜென்டினாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு Human Rights Watch உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று முஹம்மத் பின் சல்மான் ஆர்ஜென்டினாவை வந்தடைந்ததாக ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
பின் சல்மான் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படி சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் இருப்பதற்கான காரணம், சவூதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் காஷொக்ஜியை சவூதி அரேபிய தூதரகத்தில் வைத்து கொலை செய்ததன் பின்னணியில் முஹம்மத் பின் சல்மான் இருக்கலாம் என்ற பலமான குற்றச்சாட்டாகும்.