Descriptions
முல்லை,மருதம்,நெய்தல், பாலை போன்ற நில அமைப்புக்கள் கொண்ட அழகிய பூமிதான் முசலி
இருப்பினும் அதன் இன்றைய நிலை
வயல்கள் இருக்கின்றன ஆனால் விவசாயம் இல்லை
குளங்கள் இருக்கின்றன ஆனால் வரண்டு வனாந்தரமாக காட்சி தருகின்றது
காடுகள் இருக்கின்றன ஆனால் திட்டமிட்டு அளந்து எல்லை போடப்பட்டிருக்கின்றது.
மனிதவளம்.....
உலமாக்கள், துறைசார்ந்தவர்கள் இருக்கிறார்கள் திட்டமிடப்பட்டு கூறு போடப்பட்டிருக்கிறார்கள், விலை கொடுத்து கொள்வனவு செய்யப்பட்டிருக்கிறார்கள். வாக்கு வங்கி இருக்கின்றது பொய்வாக்குறுதிகளை வழங்கியும், 1000-5000 ரூபாய்களுக்கு வாக்குகள் சூரையாடப்படுகின்றன.
ஏனைய பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டது போன்ற இந்திய வீட்டுத் திட்டம், தொண்டு நிறுவனங்களால் வழங்கப்பட்ட வீடுகள், குடிநீர் வசதிகள், வடக்கின் வசந்தத்தின் மூலம் ஏனைய பிரதேசங்களுக்கு செய்யப்பட்டது போன்று அல்லது அதையும் விடக் குறைவான உட்கட்டமைப்பு வசதிகள்.
இவையும் இல்லை என்றால் முசலி அபிவிருத்தியில் பூச்சியம்தான்.
முசலிப் பற்றாளர், முசலி மைந்தன் ஒருவர் அதிகார அரசியலுக்குள் பிரவேசிக்கக் கூடாது என்பதில் குறியாய் இருக்கிறார்கள். (ஹிஸ்புல்லாவும் அதாவுல்லாவும் அவரவர் நிலப்பரப்பின் அபிவிருத்திக்காய் அயராது உழைக்கிறார்கள்)
தொடர்ந்தும் அந்த மக்கள் தேவயுடையவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கான காய்நகர்த்தல்களே மேற்கொள்ளப்படுகின்றன. தேசியத் தலைவர் கனவுக்காய் ஒரு பிரதேசமே பலிக்கடாவாகின்றது.
அன்பின் முசலி உறவுகளே நிலையான அபிவிருத்தி பற்றி சிந்திப்போம்.
பல்கலைக்கழக வளாகம், கல்வியியல் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி பற்றி சிந்திப்போம் அடுத்த தலைமுறைக்காய்
வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்காய் தொழிற்பேட்டை ஒன்று தொடர்பாய் யோசிப்போம்.
நாட்டில் புதிதாக குளங்களை நிறுவும் போது எமது குளங்களோ தூர்ந்து செல்கின்றன. எமது குளங்களின் புனர்நிர்மானம் பற்றி சிந்திப்போம்
ஒவ்வொரு கிராமத்திலும் வாசிகசாலையின் உதயம் பற்றி சிந்திப்போம்
குறித்த ஒருவரை புகழ்பாடி கால நேரங்களை வீணாக்காமல்
எமது இறையான்மையையும் ஆள்ப்புலத்தையும் பாதுகாப்பதற்காய் ஒன்று படுவோம்.
ஊடகவியலாளர் முஜீபுர் ரஹ்மான்