Descriptions
வருடாவருடம் ஒவ்வொரு பிரதேத்தில் நடாத்தப்படும் மீலாத் விழா இம்முறை மன்னார் முசலி பிரதேசத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலை காரணமாக கொழும்பில் சிறியளவில் விழாவினை நடாத்துவதற்கும் தேசிய மீலாத் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
நகரத் திட்டமிடல் மற்றும் நீஶ் வழங்கல் அமைச்சர் கொளரவ கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழா, நவம்பர் மாதம் 26 ஆம் திகதி கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியின் கபூர் மண்டபத்தில் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தேசிய மீலாத் தினப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிழ்களும் இவ்விழாவின் போது வழங்கப்படும் என விழா ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.