முசலிப் பிரதேச சபை உறுப்பினர் தாஜுதீனால் கால்நடைகள் வழங்கிவைக்கப்பட்டது
Not allow reviews
Descriptions
I.S.R.C பணிப்பாளர், சமூகசேவகர் திரு. மிஹ்லார் அவர்களின் முயற்சியின் பயனாக முசலிப் பிரதேசத்தில் காணப்படும் பிச்சவாணிப குளம், அகத்திமுறிப்பு, கூளாங்குளம், சிலாவத்துறை, இலந்தைக் குளம்,கொண்டச்சி, கரடிக்குழி போன்ற கிராமங்களில் வசிக்கும் தெரிவுசெய்யப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் 27.11.2018 அன்று வழங்கி வைக்கப்பட்டது
மேற்படி சுய தொழில் முயற்சியை வலுவூட்டும் வகையில் வாழ்வாதாரமாக வழங்கப்பட்ட ஒரு தொகை ஆடுகளை முசலி பிரதேச சபை உறுப்பினர் M.M. தாஜூதீன் அவர்கள் வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இத்திட்டத்தின் ஊடாக குறித்த பயனாளிகள் தமது கால்நடைகள் தொழிலை சிறப்பாக மேற்கொண்டு தமது வருமானத்தை ஈட்டிக்கொள்ள வாய்ப்பாக அமையும் என எதிர்பாக்கப்படுகிறது.