மக்கள் ஜனாதிபதி மைத்திரிபாலவை சர்வாதிகாரியாக பார்கின்றனர்

Not allow reviews

Descriptions

மக்கள் ஜனாதிபதி மைத்திரிபாலவை சர்வாதிகாரியாக பார்கின்றனர்.

- முகுசீன் றயீசுத்தீன் -

அரசியலமைப்புச் சொல்வதும் மக்கள் அறிந்து வைத்திருப்பதும் பிரதமரை ஜனாதிபதி பதவி நீக்க முடியாது, பாராளுமன்றத்தை நான்கரை ஆண்டுகளுக்குள் ஜனாதிபதி கலைக்க முடியாது.

ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமரை பதவி நீக்கினார். நான்கரை ஆண்டுகளுக்குள் பாராளுமன்றத்தைக் கலைத்துள்ளார். இதற்கு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டால் இறுதித்தீர்வு கிடைக்கலாம்.

உச்சநீதிமன்றம் ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கு மாற்றமாக தீர்ப்பு வழங்கினால் ஜனாதிபதிக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் இடையே பலப்பரீட்சை ஏற்படலாம். நீதிபதிகள் யாப்புக்கு முரணாக பதவி நீக்கப்படலாம். நீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதியால் நிராகரிக்கப்படலாம். ஜனாதிபதியின் நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் அங்கீகரித்தால் சர்வதேச சமூகம் நாட்டின் நீதித்துறையை விமர்சிக்கலாம்.

முன்னைய ஜனாதிபதிகள் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்ட சர்வாதிகாரத்தையே நடைமுறைப்படுத்தினர். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால யாப்பிலுள்ள சர்வாதிகார சரத்துகளை அகற்றிவிட்டு சண்டித்தனமாக புதிய பாணியில் சர்வாதிகாரம் நடத்துகிறார்.

நாட்டில் மஹிந்த சர்வாதிகாரம் இருந்த காரணத்தினால் அதிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் பாரிய எதிர்பார்ப்பில் பல்வேறு  தரப்பினரும் இணைந்து 2015 இல் ஆட்சி மாற்றமொன்றிற்கு வித்திட்டனர்.

முன்னர் நாட்டில் எவ்விதமான விசேட சாதனையையும் செய்திராத - பலமான அரசியல் பின்னணி இல்லாத மைத்திரிபால சிறிசேன நல்லாட்சி என்ற போர்வையில் பல நல்லுள்ளங்களையும் ஏமாற்றி ஆட்சிக் கதிரையில் அமர்ந்து கொண்டார்.

2015 இல் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான மக்களின் ஜனநாயகப் போராட்டத்துக்கு தலைமை வகித்த மைத்திரிபால இன்று மஹிந்தவை நண்பனாக்கிக் கொண்டு மக்களையும் ஜனநாயக சக்திகளையும் காட்டிக் கொடுத்து விட்டார்.

அப்பட்டமாகவே அரசியலமைப்பை மீறி செயற்பட்டு பிழைகளை சரி என நிறுவும் சர்வாதிகாரிகளின் பாதையைத் தேர்ந்தெடுத்து அறிவை கேள்விக்குள்ளாக்கியுள்ளார். அதற்காக அவர் கூறும் காரணங்கள் வலுவானதாகவோ பெறுமதிமிக்கதாகவோ இல்லை. நாட்டை தனது வீட்டைப் போல் நடத்த முயற்சித்துள்ளார். நாட்டுக்கு பிழையான முன்னுதாரணங்களைக் காட்டியுள்ளார்.

பிரதமர் ஒருவர் பாராளுமன்றப் பெரும்பான்மையில் இருக்கத்தக்கதாக அவரை பதவி நீக்கிவிட்டு இன்னொரு பிரதமரை நியமித்தார். இதனால் அமைச்சரவை கலைந்து புதிய அமைச்சரவை பதவியேற்றது. பெரும்பான்மையை நிரூபிக்காமலே புதிய பிரதமரும் அமைச்சரவையும் நாட்டில் பல நிறைவேற்று அதிகாரங்களை மேற்கொள்ள வழியேற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

பாராளுமன்ற அமர்வை இடைநிறுத்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் விலைபோகும் நிலையை உருவாக்கி நாட்டில் வெளிப்படையாகவே லஞ்சம், ஊழல் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆட்சி அமைப்பதற்காக வேண்டி தகுதி, தராதரமின்றி அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டு ஆட்சிமுறையே அசிங்கப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல்களை திட்டமிட்ட ஒரு குறித்த காலத்தில் அமைதியாக நடத்தி முடிக்க வேண்டிய தேவை உதாசீனம் செய்யப்பட்டு எதிர்பாராத தருணத்தில் எதிர்பாராத தேர்தலுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சட்டத்தை பலவீனமாக உருவாக்குதல், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்துதல், சட்டத்தில் ஓட்டை போடுதல் போன்றவற்றில் தேர்ச்சி பெற்று நாட்டை முன்னோக்கி நகர விடாமல் தேக்க நிலையில் வைத்திருப்பதும் தெளிவான சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமது பணிக்கு அப்பால் சட்டத்துக்கு புதிய வியாக்கியானம் கொடுக்க முற்படுவதும் மிக ஆபத்தானது.

இத்தகைய செயற்பாடுகளினால் அரசியல் ஸ்திரத்தன்மை பலவீனமுற்று  ஜனநாயகம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் நாட்டில் பொருளாதார ரீதியான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

யுத்தம் முடிவுற்றுள்ள ஒரு அமைதியான காலத்தில் நாட்டைப் பொறுப்பேற்ற மைத்திரிபால தன்னால் நாட்டை சிறந்த முறையில் ஆட்சி செய்ய முடியாது என்பதை நிரூபித்துள்ளார்.

இவ்வாண்டின் ஆரம்பத்திலேயே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடந்து அதன் அபிவிருத்திகளையோ அனுகூலங்களையோ இன்னும் மக்கள் அனுபவிக்கத் தொடங்காத ஒரு சூழ்நிலையில் அடுத்தொரு தேர்தலா என மக்கள் ஆட்சியை சலித்துக் கொள்கின்றனர். சில அபிவிருத்தி வேலைத் திட்டங்களும் தடைப்பட்டுள்ளன.

நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு, புதிய அரசியலமைப்பு உருவாக்கம், ஜனநாயக சூழலை அதிகரித்தல் போன்ற கோஷங்களுடன் நல்லாட்சி விலாசமிட்டுப் புறப்பட்ட மைத்திரி இன்று தேசத்தில் எஞ்சியிருந்த நம்பிக்கைக் கனவுகளையும் சிதைத்து சின்னாபின்னப்படுத்தி வருகிறார்.

நெல்சன் மண்டேலா, லீ குவான் யூ, ஜவஹர்லால் நேரு, பிடல் கஸ்ட்ரோ போன்ற உதாரண புருஷர்கள் வரிசையில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மைத்திரி, நீயுமா புரூட்டஸ் என்ற கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பிரகாசமாக இருக்க வேண்டிய தேசத்தின் ஒவ்வொரு விடியலும் இன்று இருள்மயமாக இருக்கிறது. தேசத்தை நேசிக்கும் பலர் தேசம் தம் கண்முன்னே நாசமடைந்து வருவது கண்டு வெட்கப்படுகின்றனர்.

தேசத்தை இத்தகைய ஈனத்தனமான செயல்களிலிருந்தும் நபர்களிலிருந்தும் காப்பாற்ற வேண்டிய கடமை பொறுப்பு வாய்ந்த ஒவ்வொரு பிரஜைக்கும் உரியதாகும்.

முகுசீன் றயீசுத்தீன் MEd
பிரதித் தவிசாளர்
முசலி பிரதேச சபை

Similar Products

5633586036505966858

CONTACT FORM

Name

*

Message *

Account Number Add to cart Add to Wishlist Add Address Apply Archive Billing Address and Shipping Address Billing Address Billing Details Cancel reply Cart Cash on Delivery Checkout Cheque Payment Company Name Country Coupon code Coupon value Coupon Customer details Direct Bank Transfer Email Address Email address... Email First Name Tax Free Shipping Tax free Home Input keywords and enter ... items to cart Last Name Link Make your payment directly into our bank account. Please use your Order ID as the payment reference. Your order will not be shipped until the funds have cleared in our account Message METHOD Name NEW ORDER Not Found Any Product Matching Your Query On sale Order Details Order ID Order Notes Order via Whatsapp Our Bank Details Out of stock PAGE MISSING Pay via PayPal; you can pay with your credit card if you have no a PayPal account UPI Transfer Pay via UPI Transfer; you can pay by scanning PayTM, PhonePe, or Gpay QR Code Please make your payment directly via UPI transfer by scaning our below QR codes. Use your Order ID as the payment reference. Your order will not be shipped until the funds have cleared in our account. Pay with cash upon delivery. Payment method Phone Place Order Please send your cheque to Postcode / Zip Price Proceed checkout Product Quantity Readmore Remove from cart Remove from wishlist Send Ship to a different address? Shipping Address Shipping and Handling Shipping Some items had been deleted or blog is in Private mode. Please reload and contact admin Some items have no price data. Please reload and contact admin for updating Something Went Wrong Sort Code SUBSCRIBE Subtotal after applied coupon Subtotal Thank you. Your order has been received Thank you. Here is your order. However, due to a network problem, the shop owner did not receive your order. Please take a screenshot and send it to the owner to finish your order The cart is empty now The wishlist is empty now This coupon is not available This search can help you find what you need Total Town / City / State Update cart View all products of View Cart View wishlist was successfully added to your cart was successfully added to your wishlist Wishlist Your Order
I have read and agree the terms