Descriptions
முசலிப் பிரதேசத்தின் சிலாவத்துறை நகர் உட்பட பிரதான வீதிகளில் அமைந்துள்ள கிராமங்களில் LED ரக தெரு விளக்குகள் பொருத்தும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று சிலாவத்துறை சந்தியில் 4 தெரு விளக்குகள் பொருத்தப்பட்டு இவ்வேலை ஆரம்பிக்கப்பட்டது. இவ்வேலைகளை மேற்பார்வை செய்யும் பொறுப்பை முசலி பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் A.R.M.றஸ்மின் அவர்களிடம் சபை ஒப்படைத்துள்ளது.
முகுசீன் றயீசுத்தீன்
உப தவிசாளர்
முசலி பிரதேச சபை