Descriptions
கிடைக்கும் சேவைகளில் மனதை பறிகொடுத்து சிக்கவைக்க வைத்த பொறிக்குள் அகப்பட்டு சுயத்தை இழந்து நமக்குள்ளேயே சச்சரவு செய்து காலத்தை கடத்துகிறார்க்ள்.
கிடைக்கும் சலுகைகளும் உதவிகளும் வாழ வைப்பதற்கல்ல அவை அவை உரம் போட்டு மொத்தமாய் உன்னிடமிருந்து அறுவடை செய்வதற்கே என்பது உனது புத்திக்கு எட்டவில்லை.
முசலியான் என்றால் ஞானம் உள்ளவன் என்கிறார்கள் ஆனால் மேற்குலகிற்கு அரபுலகம் எப்படியோ அது போலதான் சுயநலவாதிகளுக்கு முசலி என்பதும் இன்னமும் புரியவில்லை.
நமக்கே தெரியாமல் இரத்தம் உறிஞ்சும் அட்டை பூச்சிகள் போலதான் சிலர் இன்னும் முசலியை உறிஞ்சிக்கொண்டிருக்கிறார்கள் என்று கூட தெரியவில்லை.
அற்ப சுகத்துக்காக புண்னை சொறியும் முட்டாள்களாய் சிலர் முசலியை விற்றுப் பிழைப்பவர்களுக்கு இன்னமும் கால் வருடுகிறார்கள்.
முசலியின் வளம் அறிந்து இங்கு வயிறு வளர்க்க நினைக்கும் மாற்றான்களுக்கு தாம் வாழும் காலத்தையே அர்ப்பணிக்க துடிக்கிறார்கள் சிலர்.
பாவம் அவர்கள் ஆட்டுவிப்பவனுக்கு பரிசுகள் சேருவது தெரியாமல் ஆடிக்கொண்டிருக்கும் பொம்மலாட்ட மொம்மைகள்.
அநீதிகளுக்கு தலைசாய்க்காமல் உண்மையாய் வாழும் சிலருக்கு ஜமால் கசோக்கியின் சரித்திரம் நினைவூட்டப்படுகின்றது பலருக்கு.
முசலி என்னும் அழகான குடும்பம்தை போட்டி போறாமை சுயநலம் பேராசையால் மாற்றனுக்கு கூட்டிக்கொடித்துவிட்டு இப்போது தவறிப்போன அபிவிருத்தி பற்றி பிதற்றுகின்றார்கள்.
கொடுத்ததையெல்லாம் வாங்கித்தான் மாற்றானுக்கு அடிமையானது போதாதென்று விற்றும்தான் அடிமையாகும் படலம் கச்சிதமாய் நடந்தேறுகின்றது
அரிதாய் சிலருக்கு உண்மைகள் புரிந்தும் அவர்களுக்குள்ளும் சண்டைகள் மணிகட்டுவது யாரென்று.
கௌஸ் முகம்மது பயாஸ்
பொற்கேணி